ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்!

|

சில விஷயங்களை செய்ய வேண்டாம் செய்யக் கூடாது என்று பெற்றோர்களும் சொல்வார்கள், போலீஸாரும் சொல்வார்கள். அதை அனைத்தையும் அறிவுரையாகவே நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் அது அறிவுரை அல்ல எச்சரிக்கை என்பதை உணர மறந்து விடுகிறோம்.

அறிவுரை என கடக்கும் அனைத்தும் எச்சரிக்கையே

அறிவுரை என கடக்கும் அனைத்தும் எச்சரிக்கையே

ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்டுங்கள், வாகனத்தை வேகமாக ஓட்டாதிர்கள், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்தாதிர்கள், போக்குவரத்தின் போது ஹெட்செட்டில் பாட்டு கேட்காதிர்கள் என பல எச்சரிக்கைகள் அனைத்தையும் கேட்ட வேகத்தில் கடந்து செல்கிறோம். அதன் விளைவை அறியாமல் இருப்பதில் தான் பிழையே தொடங்குகிறது.

தண்டவாளத்தை கடந்த மாணவர்

தண்டவாளத்தை கடந்த மாணவர்

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த மிதுன் என்ற மாணவர் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தினசரி கல்லூரிக்கு செல்வது போல் இன்று காலையும் அவர் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ரயிலில் செல்வதற்காக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து அதன் தண்டவாளத்தை கடந்து நடைமேடையை சென்றடைய முயற்சித்துள்ளார்.

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு

அந்த சமயத்தில் அதே வழிதடத்தில் சென்னையில் இருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில் வேகமாக வந்துள்ளது. அதே வழிதடத்தில் வந்த மாணவன் மிதுன் மீது ரயில் மோதியது. இதில், மிதுன் ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

ஹாரன் அடிப்பது வழக்கம்

ஹாரன் அடிப்பது வழக்கம்

அதன்பின் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் வரும் வேகத்தில் உடனடியாக நிறுத்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி நிறுத்த முயன்றால் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாவதற்கும், அதில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர் கேள்விக்குறியாக மாறும். அனைத்து ரயில் ஓட்டுநர்களும் ரயில் தண்டவாளத்தில் மனிதர்கள், விலங்குகள் உயிரினங்கள் என எதை பார்த்தாலும் ஹார்ன் அடிப்பார்கள். தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே ரயில் வேகத்தை குறைக்க முயல்வார்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்

இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் மிதுனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர்

ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர்

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த மாணவன் மிதுன், காதில் செல்போன் ஹெட்செட் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தை கடந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
College students cross the railway track with listening songs., hit by train

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X