Coldplay Ticket India: 1 டிக்கெட் விலை ரூ. 4.32 லட்சமா? யார் இந்த கோல்டுபிளே? பிளாக்கில் டிக்கெட் விற்பனையா?
இந்தியா முழுக்க இப்போது கோல்டுபிளே குறித்த செய்திகளை தான் நம்மால் பார்க்க முடிகிறது. கிரிக்கெட் வொர்ல்டு கப் போட்டி, பீஃபா வொர்ல்டு கப் போட்டியின் பொது கூட இவ்வளவு ஹைப் கொடுக்காத இந்திய மக்கள், ஏன் ஒரு இசைநிகழ்ச்சிக்காக இத்தனை தூரம் செல்கிறார்கள் என்று விவரம் தெரியாதவர்கள் கேள்வியை எழுப்பும் விதத்தில் கோல்டுபிளே குறித்த செய்திகள் இணையத்தில் வளம் வருகின்றன. இதற்கு நடுவே, ஜனவரி 18 மற்றும் 19, 2025 ஆம் தேதி இந்தியாவில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் இப்போது ரூ. 4.32 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறதென்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யார் இந்த கோல்டுபிளே (Coldplay) இசைக்குழு?
யார் இந்த கோல்டுபிளே இசைக்குழு? இவர்கள் நடத்தும் இசைநிகழ்ச்சியின் டிக்கெட் ஏன் இந்தியாவில் பல லட்சம் வரை அதிகரித்துள்ளது? இதோ முழு விபரம். 1997 இல் நிறுவப்பட்ட இந்த Coldplay இசைக்குழுவில் பாடகர் மற்றும் பியானோ கலைஞரான கிறிஸ் மார்ட்டின், கிதார் கலைஞர் ஜானி பக்லேண்ட், பாஸிஸ்ட் கை பெர்ரிமேன் மற்றும் டிரம்மர் மற்றும் பெர்குசியனிஸ்ட் வில் சாம்பியன் ஆகியோர் உள்ளனர்.

8 வருடங்களுக்கு பிறகு நிகழும் நிகழவு.. விரக்தியில் முடிந்த Coldplay டிக்கெட் புக்கிங்:
இதற்கு முன்பு, கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குளோபல் சிட்டிசன் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக கோல்ட்பிளே நிகழ்ச்சி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, ஏறக்குறைய 8 வருடங்கள் கழித்து Coldplay இசைக்குழு இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறது. உலகளவில் இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தியாவில் இவர்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, இவர்களை அதிகமாக விரும்பும் வெறியர்களே இருக்கிறார்கள் என்று கூறலாம்.
Coldplay நிகழ்ச்சி இந்தியாவில் எப்போது நடைபெறுகிறது?
Coldplay ஆனது ஜனவரி 2025 இல் இரண்டு கச்சேரிகளை நடத்தவுள்ளது. இது ஜனவரி 18 மற்றும் 19, 2025 ஆம் தேதி நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளை இன்று ரசிகர்கள் BookMyShow இயங்குதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் வழியாக புக் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு டிக்கெட் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு BookMyShow தளம் செயலிழந்தது.
கோபத்தையும் வேதனையையும் பதிவிட்ட Coldplay ரசிகர்கள்:
இதனால், ரசிகர்கள் டிக்கெட்களை வாங்க முடியாமல் போனது. உள்நுழைந்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் கூட மனமொரு அளவிற்காகவாது சாந்தமாகியிருக்கும். ஆனால், BookMyShow தளத்திற்குள் உள்நுழைய கூட முடியாமல் போனது வேதனை அளிப்பதாக கோல்டுபிளே ரசிகர்கள் X பக்கத்தில் அவர்களின் கோபத்தையும், கவலையையும் குமுறி வருகிறார்கள். இதற்கு நடுவே இப்போது இந்தியாவில் டிக்கெட் கிடைக்காமல் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு சில தளங்கள் பிளாக்கில் டிக்கெட்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளன.
1 டிக்கெட் விலை ரூ. 4.32 லட்சமா? பிளாக்கில் டிக்கெட் விற்பனையா?
இந்நிகழ்ச்சிக்காக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட டிக்கெட் விலை ரூ.2,500 முதல் ரூ.35,000 வரை மட்டுமே பட்டியலிடப்பட்டது. ஆனால், தற்போது (இந்த பதிவை நாங்கள் எழுதிய நேரத்தின் படி) www.viagogo.com போன்ற பிளாக்டிக்கெட் தளங்களில் இதன் ஆரம்ப விலையே ரூ. 62,603 விலை முதல் துவங்கி அதிகப்படியாக ரூ. 4,32,339 வரை செல்கிறது. இந்த ஒற்றை டிக்கெட்டை வைத்து 4 நபர்கள் வரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்று பிளாக்டிக்கெட் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உஷார் மக்களே! மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்:
இதில் Lounge பிரிவின் கீழ் டிக்கெட் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மையாக இலவச பார்க்கிங், விஐபி பாஸ், சாப்பாடு, போன்ற விஷயங்கள் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக டிக்கெட் தகவலுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. சில தீவிரமான ரசிகர்கள் கோல்டுபிளே நிகழ்ச்சியை எப்படியாவது கண்டு மகிழ்ந்திட வேண்டுமென்பதற்காக இந்த தளங்களில் இருந்து டிக்கெட்களை நம்பி வாங்குகிறார்கள். இந்த தளங்களில் வாங்கும் டிக்கெட்கள் செல்லுபடியாகுமா என்ற உறுதியே இல்லாத நிலையில், இதுவொரு பெரிய மோசடியாக கூட இருக்க வாய்ப்புள்ளது என்பதனால் கவனமாக இருக்க பரிந்துரைக்கிறோம்.


Click it and Unblock the Notifications