2020 இறுதி முழு நிலவு: குளிர் நிலவை காண்பதற்கு நீங்கள் தயாரா?- ஆரஞ்ச் வண்ண நிலா!

|

2020 ஆம் ஆண்டின் இறுதி முழு நிலவு (பௌர்ணமி) குளிர் நிலவு என அழைக்கப்படுகிறது. இந்த நிலவு எப்போது காணப்படும் ஏன் குளிர்நிலவு என அழைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கங்களை பார்க்கலாம்.

2020 இன் இறுதி முழு நிலவு

2020 இன் இறுதி முழு நிலவு

2020 ஆம் ஆண்டின் இறுதி முழு நிலவு டிசம்பர் 29-30 அன்று வானத்தில் தோன்ற இருக்கிறது. இந்தியாவில் டிசம்பர் 30 ஆம் தேதி கோல்ட் மூன்(குளிர் நிலவு) தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் குளிர்ந்த காலத்தில் வரும் பௌர்ணமி(முழு நிலவு) இதையே குளிர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.

குளிர்நிலவு என்றழைக்கப்படும் முழுநிலவு

குளிர்நிலவு என்றழைக்கப்படும் முழுநிலவு

2020 இல் நிகழும் முழுநிலவு குளிர்நிலவு அமெரிக்காவில் லாங் நைட்ஸ் மூன் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த குளிர்நிலவானது இரண்டு இரவுகளுக்கு தெரியும் என கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் 13-வது பௌர்ணமி(முழு நிலவு) இதுவாகும்.

டிசம்பர் 30 அன்று வானத்தில் தோன்றும் நிலவு

டிசம்பர் 30 அன்று வானத்தில் தோன்றும் நிலவு

2020 ஆம் ஆண்டின் குளிர் நிலவு டிசம்பர் 29 மற்றும் 30 அன்று இரவு வானத்தில் தோன்றும். இந்தியாவில் இந்த குளிர்நிலவு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே சமயத்தில் வட அமெரிக்காவில் குளிர்நிலவு டிசம்பர் 29 அன்று தெரியும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே இது கட்டாயம்: சிறந்த பாதுகாப்பு மற்றும் முக்கிய செயலிகள் பட்டியல் உள்ளே!ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே இது கட்டாயம்: சிறந்த பாதுகாப்பு மற்றும் முக்கிய செயலிகள் பட்டியல் உள்ளே!

குளிர்நிலவை பார்க்க சிறந்த நேரம்

குளிர்நிலவை பார்க்க சிறந்த நேரம்

அதேபோல் குளிர்நிலவை பார்ப்பதற்கு சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு நெருக்கமாகவும், சூரிய உதய நேரத்திலும் ஆகும். இது கிழக்கு வானத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு எதிர்புறத்தில் நடக்க இருக்கிறது.

ஆரஞ்சு வண்ண நிலவு

ஆரஞ்சு வண்ண நிலவு

சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து சென்ற பிறகு நமக்கு பார்க்க கிடைப்பதால் இந்த நிலவு ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. நிலவொளி பிரகாசமான ஆரஞ்சு நிறமாகத் தோன்றும். சிறிது நேரத்திற்கு பிறகு பிரகாசமான வெள்ளை நிலவாக மாறும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் எப்போது காணப்படும்

இந்தியாவில் எப்போது காணப்படும்

டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் இந்தியாவில் கோல்ட் மூன் 100 சதவீதம் இருக்கும். குளிர் நிலவு ஆரஞ்ச் நிறத்திலும் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் குளிர் நிலவு டிசம்பர் 29 ஆம் தேதி தெரியும் என கூறப்படுகிறது.

கோள்கள் இணைப்பிற்கு பிறகு தெரியும் முழுநிலவு

கோள்கள் இணைப்பிற்கு பிறகு தெரியும் முழுநிலவு

அதேபோல் இந்த குளிர்நிலவானது வியாழனும் சனியும் நெருக்கமாக வந்த நிகழ்விற்கு பிறகு நடக்கிறது. 397 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய இணைப்பு அதாவது வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்பட்டது.

Source: dnaindia.com

Best Mobiles in India

English summary
Cold Moon 2020:Enjoy the Last Full Moon of the Year 2020

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X