சிக்னல்ல கோட்டுக்குள்ள நிக்காட்டி வீடு தேடி வரும் அபராதம்! சிக்னலில் ஸ்மார்ட் கேமராகள்!

|

கோவையைச் சேர்ந்த உயிர் என்ற தனியார் தொண்டு நிறுவனம், கோவையில் உள்ள போக்குவரத்து நெரிசல்களைத் தடுக்க, சிக்னல்களில் புதிய ஸ்மார்ட் கேமராக்களை போக்குவரத்துக்கு காவல்துறையுடன் இனைந்து பொருத்தியுள்ளது.

உயிர் தனியார் தொண்டு நிறுவனம்

உயிர் தனியார் தொண்டு நிறுவனம்

இளைஞர்கலால் உருவாக்கப்பட்டுள்ள உயிர் என்ற இந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஷியாம் கூறுகையில், 'இந்தியாவில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். அதிலும் இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டுமே அதிகளவில் விபத்துகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளதாக' அவர் கூறியுள்ளார்.

உடனடி அபராத

உடனடி அபராத

இதனைத் தடுக்கும் முதற்கட்ட முயற்சியாக அவிநாசி சாலையில் உள்ள ஐந்து முக்கிய சிக்னலில் ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கேமராகக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை உடனே அடையாளம் காட்டி அவர்களுக்கான அபராதத்தை நேரடியாக அவர்களின் வீட்டிற்கே அனுப்பிவிடும்.

<span style=சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி? " title="சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி? " loading="lazy" width="100" height="56" />சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?

எல்லைக் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துவது குற்றம்

எல்லைக் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துவது குற்றம்

சிக்னலில் நிற்காமல் செல்வது, எல்லைக் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் எனப் போக்குவரத்துக்குச் சட்டத்தை மதிக்காதவர்களின் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் படம் பிடித்து அபராதத்தையும் வழங்குகிறது.

<span style=நிலவிலிருந்து பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வெட்டியெடுக்கும் நாசா! " title="நிலவிலிருந்து பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வெட்டியெடுக்கும் நாசா! " loading="lazy" width="100" height="56" />நிலவிலிருந்து பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வெட்டியெடுக்கும் நாசா!

தபாலில் வீடு தேடி வரும் அபராதம்

தபாலில் வீடு தேடி வரும் அபராதம்

வாகனத்தின் வண்டி எண்ணை வைத்து, வாகனத்தின் உரிமையாளர் பெயர், வீட்டு விலாசம் மற்றும் முழு விபரங்கள் அனைத்தையும் சாஃப்ட்வேர் மூலம் சில நொடிகளில் கண்டறிந்து, அவர்களின் வீட்டிற்குத் தபால் மூலம் அபராதத்திற்கான செலான் அனுப்பப்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

<span style=ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?" title="ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?" loading="lazy" width="100" height="56" />ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

நடைமுறையில்

நடைமுறையில்

இந்த முறை கோயம்புத்தூரைத் தொடர்ந்து சென்னை, மதுரை, ஹைதராபாத், அகமதாபாத் என பல்வேறு நகரங்களிலும் தற்பொழுது இந்த ஸ்மார்ட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் காவலர்களுக்கான பாடி கேமரா, ஸ்மார்ட் ஃபைன் சாதனம் போன்ற சாதனங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதும் இந்த தொண்டு நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Coimbatore Youngsters Devoleped Smart Traffic Cameras To Reduce Traffic Law Violation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X