ரூ.1500-க்கு கிடைக்கும் 'வில்லேஜ் ஏசி' - மலிவு விலையில் இப்படி ஒரு ஏசியா?

|

மக்களை வாட்டி எடுக்கும் கோடைக் காலம் துவங்கிவிட்டது. இந்த ஆண்டும் வெய்யில் கொடூரமாக இருக்கப்போகிறது எனப் புலம்பிக்கொண்டிருக்கும் பலரின் எண்ணங்கள் ஏசி வாங்கி மாட்டிவிட வேண்டும் என்று யோசித்திருக்கும். அப்படி நீங்களும் யோசித்திருந்தால் இந்த மலிவு விலையில் கிடைக்கும் ஏசியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்.

மலிவு விலையில் ஏசி தயாரிக்கும் இளைஞர்

மலிவு விலையில் ஏசி தயாரிக்கும் இளைஞர்

ஏசி வாங்கி மாட்டிவிட வேண்டும் என்று யோசித்திருக்கும் பலருக்கும், அவற்றின் விலை மற்றும் பலரின் இருப்பிடம் அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு, மலிவு விலையில் ஏசி தயாரித்து விற்பனை செய்யும் பணியைத் துவங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர்.

வில்லேஜ் ஏசி

வில்லேஜ் ஏசி

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், மலிவு விலையில் ஒரு ஏர் கூலரை வடிவமைத்திருக்கிறார். இதற்கு ஜெகதீஷ் வைத்திருக்கும் பெயர் ‘வில்லேஜ் ஏசி' ஆகும். கே.எஸ்.ஜி கல்லூரியில் எம்.எஸ்.சி ஐடி பட்டப்படிப்பு முடித்த ஜெகதீஷ், ஒரு தனியார் நிறுவனத்தில் சிஸ்டம் அட்மினாக வேலை செய்து வருகிறார். இவரின் சொந்த முயற்சியில் இந்த வில்லேஜ் ஏசியை அவர் உருவாக்கியுள்ளார்.

Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?

வீட்டில் அதிகரிக்கும் வெப்பம்

வீட்டில் அதிகரிக்கும் வெப்பம்

ஜெகதீஷ் தந்து குடும்பம் மற்றும் தனது இரண்டு வயது மகளுடன் செல்வபுரத்தில் வசித்துவருகிறார். கோடை காலம் துவங்கிவிட்டால் இவரின் வீட்டில் வெப்பம் அதிகமாக இருக்குமாம், இதனால் அவரின் மகளிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுமாம். இதற்குத் தீர்வாக ஜெகதீஷ் ஏசி வாங்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், கடைக்குச் சென்று விசாரித்த போது அதன் விலை அதிகமாக இருப்பதை உணர்த்த அவர் மாற்று வழியைத் தேடி இருக்கிறார்.

யூடியூப் வீடியோ கொடுத்த ஐடியா

யூடியூப் வீடியோ கொடுத்த ஐடியா

ஜெகதீஷ் இணையதளத்தில் மாற்றுவழியைத் தேடிப்பார்த்த போது, யூடியூபில் ஏகப்பட்ட வீடியோக்களை பார்த்திருக்கிறார். அதில் கிடைத்த ஐடியாவை வைத்து, தனக்கு கிடைக்ககூடிய பொருட்களை வைத்து எப்படி ஒரு புதிய ஏர் கூலர் சாதனத்தை உருவாக்கலாம் என்று யோசித்துள்ளார். பல வீடியோக்கள் மூலம் கிடைத்த ஐடியாவுடன் தன்னுடைய ஐடியாவையும் சேர்த்து,புதிய சாதனத்தைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

மலிவான விலையில் வில்லேஜ் ஏசி

மலிவான விலையில் வில்லேஜ் ஏசி

மலிவானவிலையில் தான் அவரின் ‘வில்லேஜ் ஏசி' இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளார். இதனால் இவர் உருவாக்கிய ஏர் கூலரின் விலை ரூ.1500 முதல் தொடங்கி ரூ.4000 என்ற விலையைத் தாண்டாமல் இருக்கிறது. இந்த சாதனம் ஏர் கூலர் அளவிற்குக் முழு குளிர்ச்சி தரவில்லை என்றாலும் கூட, அறையின் வெப்பத்தை மட்டுப்படுத்தி, மிதமான குளிர்ந்த காற்று அறை முழுதும் வீசச் செய்கிறது.

வாடிக்கையாளர்களின் ஆசைக்கு ஏற்ப புது டிசைன்

வாடிக்கையாளர்களின் ஆசைக்கு ஏற்ப புது டிசைன்

ஐந்தாறு மாடல்களில் இவர் தனது வில்லேஜ் ஏசி மாடலை உருவாக்கியிருக்கிறார். அதேபோல், இவரிடம் மலிவான விலையில் வில்லேஜ் ஏசி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு ஏற்றது போல வில்லேஜ் ஏசியை பிரத்தியேகமாக வடிவமைத்துத் தரவும் கேட்டுக்கொள்கிறார்களாம். அவர்களின் ஆசைக்கு ஏற்ப ஜெகதீஷ் புதுப்புது வசதிகளோடு தனது வில்லேஜ் ஏர் கூலரை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Coimbatore Techie Invented New Village AC Cooler For Just Rs.1500 Only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X