Cognizant நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா? சைபர் அட்டாக்.! work from home காரணமா?

|

குறிப்பிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைத்துள்ளன, இந்த நேரத்தில் உலகில் சைபர் தாக்குதல்களுகம் அதிகரித்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாய்ன்ட்.

கொரோனா பெயரில் தினந்தோறும்

குறிப்பாக கொரோனா பெயரில் தினந்தோறும் நடக்கும் சைபர் தாக்குதல்கள் ஒருபுறம், வீட்டில் இருந்தே வேலை செய்வதால்முறையான சைபர் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்ற முடியாமல் ஹேக்கர்களால் செய்யப்படும் சைபர் தாக்குதல்கள் மறுபுறம்என டெக் உலகம் இப்போது கொஞ்சம் பதற்றத்தில் உள்ளது என்றே கூறலாம்.

காக்னிஸன்ட் (Cognizant)

காக்னிஸன்ட் (Cognizant)

இந்நிலையில் நேற்று பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட் (Cognizant)ஹேக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்நிறுவனம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பைஹேக் செய்துள்ளனர்.

Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?

ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்த ஹேக் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் சிலருக்கு வழங்கப்படும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது புதிதாக
உருவாக்கியுள்ள மேஸ் ரேன்சம்வேரின் (Maze Ransomeware) தாக்குதல்தான் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கின் சம்பவத்தை எதிர்கொள்வதற்கான முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகள்முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலைபார்ப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் மேலதிக தகவல்கள் எதுவும் அந்நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரேன்சம்வேர்

ரேன்சம்வேர்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ரேன்சம்வேர்கள் வகை வரைஸ்களின் பிரதான நோக்கமே தாக்கும் நிறுவனத்திடமிருந்து
பணம் பறிப்பதுதான். ரேன்சம்வேர் வகை வைரஸை குறிப்பிட்ட கணினிக்கு அனுப்புவதன் மூலம் அந்தக் கணினியில் இருக்கும்
தகவல்களை அதன் உரிமையாளர் அணுக முடியாதபடி லாக் செய்துவிடும். மேலும் ஹேக்கர்களுக்கு பணத்தை செலுத்தினால்
மட்டுமே அதை விடுவிக்க முடியும். இதுதான் பொதுவான ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலின் வழிமுறை.

 மேஸ் ரேன்சம்வேர்

மேஸ் ரேன்சம்வேர்

ஆனால் இந்த புதிய மேஸ்ரேன்சம்வேரின் வழிமுறை ஆனது கொஞ்சம் மாறுபட்டது, அதே நேரத்தில் ஆபத்தானதுகூட, இந்தவகை வைரஸ் குறிப்பிட்ட கணினியில் செலுத்தப்பட்டதும், அதில் உள்ள தகவல்களை லாக் மட்டுமே செய்யாமல் தகவல்களை ஹேக்கரின் கணினிக்கும் அனுப்பிவிடும், இதனால் ஹேக்கர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அந்த தகவல்கள் அனைத்தும் டார்க் வெப்பில் வெளியிடப்படும். இதனால் அந்த குறுப்பிட்ட நிறுவனத்தின் பெயரும் பாதிக்கப்படும் எனும் நோக்கில் செயல்படுகின்றனர் இந்த மேஸ் ரேன்சம்வேர் ஹேக்கர்கள்.

கடந்த 2019-ல் தான் அறிமுகமானது

இந்த மேஸ் ரேன்சம்சேர்கள் கடந்த 2019-ல் தான் அறிமுகமானது, குறிப்பாக அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவானது அதிகரித்து வரும் மேஸ் ஹேக்கிங்கள் குறித்து டெக் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட்டை ஹேக் செய்ததிலிருந்து இது பரவலாக அனைவரும் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?

 சைபர் இன்ஷூரன்ஸ்

மேலும் ஸ்விட்டசர்லாந்தைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்படும் சுஃப் (Chubb) என்ற சைபர் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் மேஸ் ரேன்சம்வேகர் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹேக்கர்களின் வலைதளத்தில் எந்தெந்த நிறுவனத்தின் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலில் சுஃப் நிறுவனமும் இருந்தது.

 நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும்

தற்சமயம் காக்னிஸன்ட் நிறுவனம் மேஸ் ரேன்சம்வேர்களால்தான் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும், மேஸ் ரேன்சம்வேரை வைத்து ஹேக் செய்யும் ஹேக்கர் குழு இதை மறுத்துள்ளது. ஆனால் அவர்களது வலைதளத்தில் காக்னிஸன்ட் நிறுவனத்திலிருந்து தகவல் திருடப்பட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை. இருந்தபோதிலும் அது நம்பும்படியாக இல்லை என நிறுவனமும் மற்றும் சில சைபர் பாதுகாப்பு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

Best Mobiles in India

English summary
Cognizant Revenue Hit by 'Maze' ransomware Cyber attack: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X