வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வா?அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்

|

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களை பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்திய ஊழியர்களை ஊக்குவிக்கக் கூடுதலாக 25 சதவிகித சம்பளம் வழங்கப்படும் என்று பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்தே வேலை

வீட்டிலிருந்தே வேலை

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் உள்ள நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் சோர்ந்துவிடக்ககூடாது என்பதற்காக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ப்ரையன் ஹஃம்ப்ரிஸ், ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

25 சதவீதம் கூடுதல் சம்பளம்

25 சதவீதம் கூடுதல் சம்பளம்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இந்தியா மற்றும் பிலிப்பைன்சில் தொடர்ந்து வேலை செய்து சேவையைத் தடையில்லாமல் வழங்கி வரும் அசோசியேட்ஸ் எனப்படும் இணைப் பணியாளர்கள் மற்றும் அதற்குக் கீழ் இருக்கும் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த 25 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கூடுதல் போனஸ், ஏப்ரல் மாத சம்பளம் உடன் சேர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jio வழங்கும் 2 ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?Jio வழங்கும் 2 ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

1.35 லட்சம் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்

1.35 லட்சம் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்

நியூஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்ட காக்னிசென்ட்டில், இந்தியாவில் மட்டும் 2,03,700 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 1.35 லட்சம் ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் இணைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் தங்களது சம்பளத்திலிருந்து கூடுதலாக 25 சதவிகிதம் அதிகரிப்புடன் சம்பளத்தைப் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிச்சயம் உத்வேகம் அளிக்கும்

நிச்சயம் உத்வேகம் அளிக்கும்

கொரோனா வைரஸ் காரணமாகப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த முடிவு பணியாளர்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?

பெரிய மனத்துடைய ப்ரையன் ஹஃம்ப்ரிஸ்

பெரிய மனத்துடைய ப்ரையன் ஹஃம்ப்ரிஸ்

தொடர்ந்து நமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபடுங்கள் என்று ப்ரையன் ஹஃம்ப்ரிஸ் கூறியுள்ளார். இதே முயற்சியை மற்ற நிறுவனங்களும் மேற்கொண்டால் அனைத்து ஊழியர்களும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மற்ற நிறுவன ஊழியர்களின் மனம் ஆசைப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Cognizant Announces 25 Percent Pay Rise For Indian Based Work From Home Employees : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X