குறைந்த விலையில் ஐபோன் வாங்க நினைத்த இளைஞர்: கடைசியில் வந்தது இதுதான்.!

|

ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான இயங்குதளம், தரமான மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்கள் கொண்டு ஐபோன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும் ஐபோன் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும்.

டைகளில் சென்று

இப்போது ஸ்மார்ட்போன்களை கடைகளில் சென்று வாங்குவதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் மக்கள் தான் அதிகம். அதிலும் ஆன்லைன் தளங்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அதிமாக இருப்பதால் மக்கள் இதையே தேர்வுசெய்கின்றனர்.

ஆன்லைன் தளங்களில்

மேலும் இந்த ஆன்லைன் தளங்களில் ஒரு சில நேரங்களில் ஐபோன்களுக்கு பதிலாக போலி ஸ்மார்ட்போன்கள் மற்றும் சோப் பார்கள் டெலிவரி செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதேபோல் அண்மையில் ஒரு ஈ-காமர்ஸ் தளத்திலிருந்து ஐபோனை ஆர்டர் செய்த தாய்லாந்தை சேர்ந்த இளைஞன் மிகப் பெரிய பார்சலை பெற்றான். அந்த பார்சலில் இருந்தது என்னவென்றால் ஐபோன் மாடலில் இருக்கும் ஒரு டேபிள் ஆகும்.

அறிக்கையின்படி,

Oriental Daily Malaysia அறிக்கையின்படி, தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு ஈ-காமர்ஸ் தளத்தில் ஐபோன் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதைக் கண்டு உற்சாகமாகி, முழு விவரங்களைப் படிக்காமல் ஆர்டர் செய்துள்ளார். அவர் தனது ஐபோன் வரும் வரை ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் டெலிவரி செய்யப்பட்டது ஐபோன் வடிவில் ஒரு பெரிய டேபிள். ஆனால் இதைடெலிவரி செய்த ஈ-காமர்ஸ் தளத்தின் மீது தவறில்லை. அவர் சரியாக அந்த தயாரிப்பு விவரங்களை படிக்காமல் ஆர்டர் செய்துள்ளார்.

ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்த பிலிப்ஸ்!ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்த பிலிப்ஸ்!

போன் வடிவ டேபிள்

அதாவது ஐபோன் வடிவ டேபிள் ஆனது ஐபோன் விலையை விட மிகவும் குறைவாக இருந்துள்ளது. ஆனால் அந்த இளைஞர் சரியான விவரங்களைப் படிக்காமல் ஐபோன் விலை கம்மியாக இருக்கிறதே என்று நினைத்து ஐபோன் வடிவம் கொண்ட காபி டேபிளை ஆர்டர் செய்துள்ளார். தற்போது இந்த ஐபோன் வடிவம் கொண்ட டேபிள் உடன் அந்த இளைஞர் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது ஒரு பொருளை வாங்கும் போது அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக விலை கம்மியாக இருக்கிறதே என்று எந்த ஒரு சாதனத்தையும் உடனே வாங்குவது தவறு. அதாவது அந்த சாதனத்தின் விலை என்ன? review மற்றும் ஸ்டார் வேல்யூ போன்ற அனைத்து முழு விவரங்களையும் சரியாக பார்க்க வேண்டும்

ஐபோன் 6எஸ்

பின்பு ஐபோன் வடிவில் காபி டேபிள் பெற்றுக்கொண்ட அந்த இளைஞருக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஐபோனுக்கு பதிலாக டேபிள் கிடைத்துவிட்டதே என்று எந்த வருத்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த டேபிள் பார்ப்பதற்கு ஐபோன் 6எஸ் போல் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா நாட்டை

மேலும் சில நாட்களுக்கு முன்பு சீனா நாட்டை சேர்ந்த லியு (Liu) என்ற இளம்பெண் ஆப்பிள் ஐபோன் இணையத்தளத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை ஆர்டர் செய்துள்ளார். பின்பு இந்த சாதனத்திற்கான தொகை 1,500 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.1,10,142) ஆன்லைனில் செலுத்தியுள்ளார். தொகை செலுத்திய சில நாட்களில் லியுக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் ஆசையாக ஐபோன் பாக்ஸை பிரித்துள்ளார் லியு. ஆனால் அதற்கு உள்ளே ஆப்பிள் ஜூஸ் இருந்ததைக் கண்டு லியு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டது குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளமான Weibo-ல் பதிவேற்றியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
table came instead of the iPhone ordered by the youth: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X