Home
News

Nothing-ன் நச்.. வெறும் ரூ.500 கொடுங்க போதும்.. சைலன்ட்-ஆ நடக்கும் CMF வாட்ச், பட்ஸ், அடாப்டர் விற்பனை!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ச் ப்ரோ (Watch Pro) ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பட்ஸ் ப்ரோ (Buds Pro) இயர்பட்ஸானது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக சத்தமின்றி விற்பனையை தொடங்கியுள்ளன.

ப்ரீ-ஆர்டர் பாஸ் (Pre-order pass) முறையில் நடக்கும் இந்த விற்பனையின்கீழ் சிஎம்எஃப் பிராண்டின் ஸ்மார்ட்வாட்ச் (Smart Watch), இயர்பட்ஸ் (Earbuds) மற்றும் பவர் அடாப்டரை (Power Adapter) வாங்குவது எப்படி? இந்த பிளைண்ட் டிராப் ப்ரீ-ஆர்டர் பாஸின் கீழ் என்னென்ன கூடுதல் சலுகை கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சைலன்ட்-ஆ நடக்கும் CMF வாட்ச், பட்ஸ், அடாப்டர் விற்பனை!

வாட்ச் ப்ரோ மற்றும் பட்ஸ் ப்ரோவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்கான பாஸை பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் வாங்க முடியும். இந்த விற்பனை குறிப்பிட்ட தேதியன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கும். இந்த பாஸை வாங்குவதன் மூலம் உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

இந்த பாஸ் சிஎம்எஃ தயாரிப்புகளுக்கான ஆரம்ப அணுகலை (Early Access) வழங்குவது மட்டுமின்றி சில சிறப்பு பலன்களையும் வழங்கும். இருப்பினும் இந்த பாஸ் உங்களுக்கு இலவசமாக கிடைக்காது. இதற்காக நீங்கள் ரூ.500 ஐ செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்கள் வைப்புத் தொகையாக (Deposit amount) இருக்கும் கூடவே ரூ.1000 ரூபாய் மதிப்புள்ள பலன்களையும் வழங்கும்.

இந்த ப்ரீ ஆர்டர் பாஸ் ஆனது ஸ்மார்ட்வாட்ச் அல்லது இயர்பட்ஸை சிறப்பு வெளியீட்டு விலையில் (Special Launch Price) வாங்க அனுமதிக்கும். மேலும் இந்த பாஸை பெற்றவர்கள் எதிர்காலத்தில் நத்திங் அல்லது சிஎம்எஃப் தயாரிப்புகளை வாங்கினால் கூடுதலாக ரூ.500 மதிப்பிலான வவுச்சரை பெறவும் அனுமதிக்கும். இந்த பாஸ் பொது விற்பனை (General sale) தொடங்கும் முன்னதாக முன்னுரிமை டெலிவரி பேட்ஜையும் வழங்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஆனது 45dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) தொழில்நுட்பத்துடன் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள வாட்ச் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் 600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ( 600 nits peak brightness) உடனான 1.96-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.96-inch AMOLED display) கொண்டிருக்கும்.

இதுகுறித்து வெளியான டீஸர்கள், இந்த வாட்ச் ஒரு செவ்வக டயலை (Rectangle dial) கொண்டிருப்பதை காட்டுகிறது; இது நாம் பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும் அதே டயல் தான். மீதமுள்ள அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது வரையிலான இன்னும் மறைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் அதுகுறித்த விவரங்களை நத்திங் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎம்எஃப் பை நத்திங் (CMF by Nothing) என்பது அணுகல்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் மேம்பட்ட வடிவமைப்புகளை (Improved designs that prioritize accessibility) வழங்கும் ஒரு பிராண்ட் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன்கீழ் உருவாகும் தயாரிப்புகள் பிளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா (Myntra) போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் உட்பட ஆஃப்லைன் சேனல்களின் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

சிஎம்எஃப் நிறுவனத்தின் முக்கிய தத்துவம் நல்ல வடிவமைப்பை ஜனநாயகப்படுத்துவதை (Democratizing good design) சுற்றி சுழல்கிறது, இதன் மூலம் அதிகமான நபர்களை / வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது. இப்போதைக்கு இந்நிறுவனத்தின் முதல் 3 தயாரிப்புகளாக ஒரு ஸ்மார்ட்வாட்ச், ஒரு ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் மற்றும் ஒரு பவர் அடாப்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்.

Photo Courtesy: Nothing & CMF Fans X Page @NothingCMFFans

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF by Nothing Silently To Start Pre order Pass Sale Of Its First 3 Products Via Flipkart on Sep 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X