அடிச்சான் பாரு Nothing.. உலகின் முதல் 50dB நெக்பேண்ட்.. ANC உடன் CMF இயர்பட்ஸ்.. விலை என்ன தெரியுமா?
நத்திங் (Nothing) பிராண்டின் துணை பிரண்டான CMF இப்போது புதிதாக 2 புதிய சாதனங்களை நத்திங் போன் 2a (Nothing Phone 2a) உடன் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது என்ன சாதனம் என்ற விபரம் இதோ.
CMF by Nothing: நத்திங் நிறுவனம் அதன் அடுத்த பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 2a (Nothing Phone 2a) டிவைஸை வரும் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது நத்திங் பிராண்டின் துணை பிரண்டான CMF by Nothing அதே நாளில் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

நத்திங் போன் (2a): இது நத்திங் போன் (2a) நிகழ்வில் CMF பட்ஸ் மற்றும் CMF நெக்பேண்ட் ப்ரோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CMF by Nothing இன்று அதன் புதிய பட்ஸ் மற்றும் நெக்பேண்ட் ப்ரோவின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. புதிய CMF தயாரிப்புகள் நத்திங் ஃபோனுடன் (2a) மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
சிஎம்எஃப் பட்ஸ் (CMF Buds): சிஎம்எஃப் கடந்த ஆண்டு நத்திங்கின் புதிய துணை பிராண்டாக அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ பட்ஜெட் பிரிவில் வழங்குகிறது. சிஎம்எஃப் பட்ஸ் (CMF Buds) மற்றும் சிஎம்எஃப் நெக்பேண்ட் ப்ரோ (CMF Neckband Pro) ஆகியவை நத்திங் ஈவென்ட்டில் (Nothing Event) அறிமுகம் செய்யப்படும். இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்கு இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
CMF பிராண்ட்: இந்த நிகழ்வில் Nothing Phone (2a) தவிர வேறு பல தயாரிப்புகளின் அறிமுகத்தையும் நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை நத்திங் ஈவென்ட் இன் அறிமுக நிகழ்வுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. CMF அதன் புதிய தயாரிப்புகளை முதல் டீஸர் மூலம் டீஸ் செய்து வருகிறது. அது என்ன சாதனமாக இருக்கும் என்று எல்லோரும் யூகித்து வந்த விலையில், நிறுவனம் இப்போது இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளது.

முதல் 50dB ஹைப்ரிட் ANC டிவைஸ்: நத்திங் ஃபோன் (2a) பற்றிய தகவலை நேற்று நிறுவனம் வெளியிட்ட பொழுது, இந்த முறை CMF பிராண்டின் கீழ் புது நெக்பேண்ட் ப்ரோ சந்தானம் வெளியிடப்படும் என்றும், இது முதல் 50dB ஹைப்ரிட் ANC சாதனமாக இருக்கும் என்பதை துணை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் வாங்குவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CMF நெக்பிராண்ட்: CMF வழங்கும் முதல் நெக்பேண்ட் சாதனம் இதுவாகும். இந்த நெக்பேண்ட் CMF இன் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வருகிறது. இது லைட் க்ரேய் நிறத்தில் பவர் பட்டனை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. அடுத்த சாதனமாக நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பது CMF பட்ஸ் ஆகும். இது துணை பிராண்டின் இரண்டாவது TWS ஆகும்.
விலை: இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) உடன் வெளிவரும். பெயரை வைத்து பார்த்தால், இது பெரும்பாலும் CMF பட்ஸ் ப்ரோவிற்கு கீழே இருக்கும், இதன் விலை ரூ.3,499 இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. CMF பட்ஸ் ஏற்கனவே இந்த பட்ஜெட் விலைப் பிரிவில் ANC உடன் சிறந்த போட்டியாளராக இருக்க விரும்புகிறது என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications