'அம்மா'விற்கு பிடித்த 'தொழில்நுட்பம்'..!

|

தினம் தினம் பல பிரச்சனைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து கொண்டே இருந்தாலும் 'செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருப்பதில்' தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நிகர் அவரே தான்..!

மக்கள் திட்டங்கள், தொடக்க விழாக்கள், அறிமுகங்கள் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அவர், அவை அனைத்தையுமே 'பெரும்பாலும்' வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலமாகவே திறந்து வைக்கிறார். அந்த வகையில் பார்க்கும் போது 'அம்மா'விற்கு பிடித்த, குறைந்த நேரம் மட்டுமே செலவு செய்ய தகுந்த மற்றும் வசதியான தொழில்நுட்ப கருவியாகி விட்டது - வீடியோ கான்ஃப்ரென்சிங்..!

வீடியோ கான்ஃப்ரென்சிங் என்பது ஒரு தொலைதொடர்பு தொழில்நுட்பமாகும். அதன் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேலான இடங்களில் இருந்து நேரடியாக வீடியோ மற்றும் ஆடியோ தொடர்பு கொள்ள முடியும். அது போன்று வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் 'அம்மா' தொடங்கி வைத்த சில திட்டங்களைத் தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

மெட்ரோ ரயில் :

மெட்ரோ ரயில் :

கடந்த திங்கள் அன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் திறந்து வைத்தார்..!

துணை மின் நிலையங்கள் :

துணை மின் நிலையங்கள் :

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மொத்தம் 63 துணை மின் நிலையங்களை வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் திறந்து வைத்தார்..!

அம்மா உணவகங்கள் :

அம்மா உணவகங்கள் :

கடந்த மே மாதம் 200க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

பசுமை கூடில்கள் :

பசுமை கூடில்கள் :

கடந்த ஜூன் மாதம் 56,830 சூரியசக்தி மூலம் இயங்கும் பசுமை கூடில்களை தமிழகம் முழுவதும் வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் திறந்து வைத்தார்..!

சிப்காட் திறன் மேம்பாட்டு மையம் :

சிப்காட் திறன் மேம்பாட்டு மையம் :

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிப்காட் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்..!

எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி :

எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி :

94 கோடி ரூபாய் செலவில் உதகமண்டலத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார்.

 அணைகள், பாலங்கள் :

அணைகள், பாலங்கள் :

98 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அணைகள், பாலங்கள் போன்றவைகளை வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் திறந்து வைத்தார்..!

அம்மா மருந்தகங்கள் :

அம்மா மருந்தகங்கள் :

கடந்த ஜூன் மாதம் 10 அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தார்..!

பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடை :

பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடை :

31 பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளையும் வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம்தான் திறந்து வைத்தார்..!

அரசு பேருந்துகள் :

அரசு பேருந்துகள் :

கடந்த ஜூன் மாதம் 290 புதிய அரசு பேருந்துகளை வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் துவங்கி வைத்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here about CM Jayalalitha's favorite technology trick. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X