லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மொபைல்போன் செயலி.! ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

|

இப்போது வரும் புதிய புதிய மொபைல்போன் செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆந்திராவில் ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏசிபி 14400 (Anti-Corruption Bureau (ACB)) என்ற மொபைல்போன் செயலியை அம்மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏசிபி 14400

ஏசிபி 14400

அதாவது 'ஏசிபி 14400' (ACB 14400) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

குறிப்பாக இந்த ஏசிபி 14400 என்ற மொபைல்போன் செயலியை பதிவிறக்கம் செய்த உடன், மொபைல்நம்பரை உறுதி செய்ய, ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அனுப்பப்படும். அதன்பின்பு இந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன்இதில் நேரடி புகார் மற்றும் புகாரை பதிவு செய்தல் என்று இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

திரும்ப வாங்க இல்லனா ராஜினாமா செய்யுங்க: எலான் மஸ்க் அனுப்பிய இமெயில்- டெஸ்லா ஊழியர்கள் அதிர்ச்சி!திரும்ப வாங்க இல்லனா ராஜினாமா செய்யுங்க: எலான் மஸ்க் அனுப்பிய இமெயில்- டெஸ்லா ஊழியர்கள் அதிர்ச்சி!

 ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்திடவும்  முடியும்

குறிப்பாக நேரடி புகார் பிரிவில், லஞ்சம் கொடுப்பதை நேரடியாக புகைப்படமாக பதிவு செய்தல், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்திடவும்முடியும்.

ரூ. 8,999 விலையில் இப்படி ஒரு புது சாதனமா? Moto E32s வாங்க சரியான நேரம் இது தான்.. நீங்க ரெடியா?ரூ. 8,999 விலையில் இப்படி ஒரு புது சாதனமா? Moto E32s வாங்க சரியான நேரம் இது தான்.. நீங்க ரெடியா?

புகாரை பதிவு செய்தல்

அடுத்து உள்ள 'புகாரை பதிவு செய்தல்' பிரிவில், லஞ்சம் குறித்த புகாரை பதிவு செய்து அது குறித்து தங்களிடம் உள்ள ஆவணங்கள், வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்து அனுப்ப முடியும்.

48எம்பி கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!48எம்பி கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 நீங்கள் புகாரை அனுப்பிய உடன்,

அதேபோல் நீங்கள் புகாரை அனுப்பிய உடன், அதற்கான பதிவு எண் அனுப்பப்படும். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புகாரை
ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். மேலும் வாட்ஸ்அப்செயலி தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த தகவலை இப்போது பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் நூதன மோசடி: எந்தவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே ரூ.15 லட்சத்தை இழந்த பெண்.!வாட்ஸ்அப் செயலியில் நூதன மோசடி: எந்தவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே ரூ.15 லட்சத்தை இழந்த பெண்.!

வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்நிலையில்வாட்ஸ்அப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவல்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

 இன்ஃபோ (WABetaInf

வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) தகவல்களின் படி, சில ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், பின்பு அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம் மற்றும் அதற்கு

ஐஒஎஸ் 11 (ios 11) இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்குவாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் வரும் அக்டோபர் 24-ம் தேதி இதன் காலக்கொடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே அக்டோபர் 24-ம் தேதிக்கு பிறகு இந்த இயங்குதளங்கள் கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ன் 5, ஐபோன் 5சி போன்ற மாடல்களு

ஐபோன் 5, ஐபோன் 5சி போன்ற மாடல்களுக்கு இதுவரை ஐஒஎஸ் 12 (ios 12) இயங்குதள அப்டேட் கிடைக்கவில்லை. எனவே இந்தஐபோன் மாடல்கள் சிக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 5 சீரிஸ் மாடல்களை இப்போதும் கூட அதிக பயனர்கள்உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் தளத்தில் பாதுகாப்புக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே பழைய இயங்குதளங்களுக்கு ஒன்றியதாக வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டுகள் இருக்காது. குறிப்பாக பழைய பதிப்புகளுக்கு ஈடாக புதிய கால தொழில்நுட்பங்களை நிறுவ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்நிறுவனம் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதுடன் பாதுகாப்பு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்
நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயனர் புகார்களின் அடிப்படையில் கணக்குகளை தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
CM Jagan Mohan Reddy introduced the mobile app to register complaints related to corruption: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X