Home
News

அடடா., தலைதூக்கும் கிளப்ஹவுஸ்- இந்த சமூகவலைதளத்தை எப்படி டவுன்லோட் செய்து பயன்படுத்துவது?

கிளப்ஹவுஸ் என்பது 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக ஊடக தளமாகும். மேலும் இது ஐஓஎஸ்-ல் மட்டுமே கிடைக்கும் பயன்பாடாக இருந்த நிலையில் தற்போது ஆண்ட்ராய்டிலும் கிடைக்கிறது. கிளப்ஹவுஸ் ஒரு சமூகவலைதளமாகும். இது கடந்த சில தினங்களாக பேசுபொருளாக மாறிவருகிறது. இது வீடியோ மற்றும் மல்டீமீடியா அல்லாத ஒலியுடன் கூடிய பயன்பாடாகும்.

கிளப்ஹவுஸ் ரூம்கள்

கிளப்ஹவுஸ் ரூம்கள்

கிளப்ஹவுஸ் ரூம்கள் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த ஆப்-ல் ரூம்கள் உருவாக்கப்பட்டு மக்கள் தொடர்பு கொள்ளலாம். பயனர்கள் இந்த அறையில் இருந்து வெளியேறும்போது இந்த அறை மறைந்துவிடுகிறது. கிளப்ஹவுஸ் பயன்பாடானது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெரும் பேசு பொருளாக மாறிவருகிறது. இந்த கிளப்ஹவுஸ் பயன்பாட்டில் மூன்று அறைகள் இருக்கிறது. இது ஓபன், க்ளோஸ் மற்றும் சோசியல் ஆகிய மூன்று அறைகள் ஆகும்.

கிளப்ஹவுஸ் பயன்பாடு

கிளப்ஹவுஸ் பயன்பாடு

கிளப்ஹவுஸ் பயன்பாடானது விவாதங்களுக்கு மட்டுமின்றி இசை அம்சத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த தளம் பாடல்களை பாடவும் பகிரவும் பயனர்கள் இந்த தளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கிளப்ஹவுஸ் பயன்பாடானது ஆண்ட்ராய்டு பதிப்பு அறிமுகமாகி சில நாட்களே ஆகிறது. முன்னதாகவே நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்த பயன்பாடு பிரதானமாக மாறிவருகிறது.

அனைத்து வகையான பயனர்களுக்கும் பொழுதுபோக்கு

அனைத்து வகையான பயனர்களுக்கும் பொழுதுபோக்கு

கிளப்ஹவுஸ் என்பது அனைத்து வகையான பயனர்களுக்கும் பொழுதுபோக்கு, தகவல் சேகரிப்பு, கலந்துரையாடல் அல்லது விவாதங்களுக்கு பயன்படுத்த சிறந்த தளமாக மாறிவருகிறது. இந்த பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் கிளப் ஹவுஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் இந்த பயன்பாடு மதிப்பீடு 4.4 ஆக இருக்கிறது.

பயன்பாட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி

பயன்பாட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி

கிளப்ஹவுஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து திறக்கும் போது வரவேற்பு பக்கம் காண்பிக்கப்படும். இதில் பக்கத்தின் கீழ் பயனர் பெயரை தேர்வு செய்யும் விருப்பம் காண்பிக்கப்படும். இந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். கிளப்ஹவுஸ் பயன்பாட்டில் உள்நுழைய தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின் தங்களது தொலைபேசி எண்ணை பதிவிட்டு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஓடிபி எண் அனுப்பப்படும்

ஓடிபி எண் அனுப்பப்படும்

ஸ்மார்ட்போனில் நான்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். மேலும் இந்த குறியீடு பெறவில்லை என்றால், மீண்டும் அனுப்புவதற்கு ஆப்ஷன் கீழே காண்பிக்கப்படும். இந்த ஓடிபி எஸ்எம்எஸ் வடிவில் பெறப்படும். இந்த குறியீட்டை உள்ளிட்ட பிறகு அடுத்து செல்க என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் முழு பெயர் என்ன என்று கேட்கப்படும் அதில் உங்கள் முழு பெயரை உள்ளிட வேண்டும்.

பயனர் பெயரைத் தேர்வு செய்வதற்கான விருப்பம்

பயனர் பெயரைத் தேர்வு செய்வதற்கான விருப்பம்

அதன்பின் உங்கள் பயனர் பெயரைத் தேர்வு செய்வதற்கான விருப்பம் கேட்கப்படும். இதில் பிறருக்கு உங்கள் பெயரை என்னவாக காண்பிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதோடு உங்கள் கணக்கு தயாராகிவிடும். எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்ற ஒரு சாளரம் காண்பிக்கப்படும். அதன்பின் உங்கள் கணக்கு தயாராகும் வரை காத்திருக்க வேண்டும்.

புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான விருப்பம்

புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான விருப்பம்

இந்த பணி அனைத்தும் முடிந்ததும் கணக்கு தயாராகும். அதன்பின் புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான விருப்பம் காண்பிக்கப்படும். இதில் விருப்பப்பட்ட பொதுவான புகைப்படமோ அல்லது தங்களது புகைப்படத்தையோ வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்று உங்கள் தொடர்புகள் (Contacts) உள்ள நபர்களை பின்தொடருவதற்கான விருப்பம் காண்பிக்கப்படும். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆர்வங்களை தேர்வு செய்யலாம்

ஆர்வங்களை தேர்வு செய்யலாம்

கிளப்ஹவுஸில் உள்நுழைந்த உடன் தங்கள் ஆர்வங்களை தேர்வு செய்யும் விருப்பம் காண்பிக்கப்படும். இதில் தங்களுக்கு தேவையான விருப்பத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம். இதில் உருவாக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைய தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை கிளப்ஹவுஸ் பயன்படுத்தாதவர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
ClupHouse APP: How to Download and Use ClupHouse APP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X