Home
News

சர்ப்ரைஸ்.. பட்டன்களுடன் உலாவும் iPhone.. ஆப்பிள் ரசிகர்களை கவரும் புது சாதனம்.. என்னது இது? ஓஹோ.!

தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்ட ஒரு ஸ்மார்ட் போன் நிறுவனம் ஆப்பிள் (Apple). ஐபோனைப் (iPhone) போலவே, புகழ்பெற்ற மற்றொரு சாதனமென்றால் அது ப்ளாக்பெர்ரி (Blackberry) தான். இந்த போன்களின் சிறப்பே அதன் க்வெர்டி (QWERTY) பட்டன் கீபோர்ட் தான்.

சாதாரண பட்டன் போன்களுக்கு (Button phones) மத்தியில் இதன் வித்தியாசமான கீபோர்ட் அம்சம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி, போன்களில் டைப் (Phone typing) செய்வதை எளிமையாக்கியது. இத்தகைய அம்சம் இப்போது ஐபோன்களுக்கும் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! இன்று வரும் ஸ்மார்ட்போன்களில் க்வெர்டி கீபோர்ட் டிஸ்ப்ளேயினுள்ளேயே (QWERTY keyboard) வருகிறது என்றாலும், பட்டன் விரும்பிகளுக்கு இது ஒரு ஏக்கமாகவே இருக்கிறது.

சர்ப்ரைஸ்.. பட்டன்களுடன் உலாவும் iPhone.. ரசிகர்களை கவரும் புது சாதனம்

இந்த ஏக்கத்தை போக்க, புகழ்பெற்ற க்ளிக்ஸ் (Clicks) என்ற நிறுவனம் புதிய ஐபோன் கேஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஐபோன் (iPhone) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே அதன் டிசைனானது ஒரே மாதிரிதான் உருவாக்கப்படுகிறது. கூடுதலாக எந்த பட்டனும் இல்லாமல் அனைத்தும் டிஸ்ப்ளே (Display) உள்ளே இணைக்கப்பட்டது மக்களை கவர ஒரு காரணமாக இருந்தது.

விதியசமான QWERTY ஐபோன் கீபோர்ட் கேஸ் (iPhone QWERTY Keyboard case):

இதனை பின்பற்றி பல ஸ்மார்ட்போன்கள் (Smartphones) வெளிவர ஆரம்பித்து உலகத்தையே ஆட்சி செய்து வருகிறது. ஐபோனின் இந்த டிசைனில் மற்றொரு அம்சத்தை சேர்க்க புதிய க்வெர்டி கீபோர்ட் கொண்ட கேஸ் (QWERTY keyboard iPhone case) ஒன்றை புகழ்பெற்ற யூட்யூபர் (YouTube) மைக்கல் ஃபிஷர் மற்றும் டெக் ப்ளாக் நிறுவனர் க்ராக்பெர்ரி கெவின் ஆகியோர் இணைந்து நடத்தும் நிறுவனமான க்ளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ப்ளாக்பெர்ரி ஸ்டைல் கீபோர்டை (Blackberry style keyboard) ஐபோனிற்கு தயாரித்த முதல் நிறுவனம் என்ற புகழை இந்த க்ளிக்ஸ் இப்போது பெற்றுள்ளது. இந்த கேஸானது சார்ஜிங் போர்ட் வழியாக ஐபோனுடன் இணைக்கப்படும். இணைத்த பின்னர் அதில் இருக்கும் கீபோர்ட் வழியாக ஐபோனில் எப்போதும்போல டைப் செய்துகொள்ளலாம். இந்த கேஸின் கீழ்பக்கம் இருக்கும் சார்ஜிங் போர்ட் வழியாக எப்போதும்போல ஐபோனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இதனால் ஐபோனை பயன்படுத்துவதிலும், சார்ஜ் செய்வதிலும் எந்த சிரமமும் இருக்காது என்று கூறப்படுகிறது. "பம்பில்பீ" (Bumblebee) ப்ரைட் யெல்லோ மற்றும் "லன்டன் ஸ்கை" (London Sky) என்ற இரண்டு நிறங்களில் வரும் இந்த ஐபோன் கேஸை (iPhone Case) பயன்படுத்தும்போது ப்ளாக்பெர்ரி போனை பயன்படுத்துவது போன்ற உணர்வு ஏற்படும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்ப்ரைஸ்.. பட்டன்களுடன் உலாவும் iPhone.. ரசிகர்களை கவரும் புது சாதனம்

முற்றிலுமாக திரையின் மூலம் மட்டுமே ஐபோனை கன்ட்ரோல் செய்தவர்களுக்கு இந்த கீபோர்ட் கேஸ் (QWERTY keyboard mobile case) ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிலருக்கு பட்டன்களை அழுத்தும்போது ஏற்படும் உணர்வு, எழுப்பப்படும் சப்தம் ஆகியவை மிகவும் விருப்பமானதாக இருக்கும். ஸ்மார்ட்போனின் வரவிற்கு பிறகு அந்த ஆனந்தம் கிடைக்கவில்லை என்று பலர் ஏங்கியிருக்கலாம்.

கிளிக் ஐபோன் QWERTY கீபோர்ட் கேஸ் விலை என்ன: (Click iPhone QWERTY Keyboard Case Price):

இந்த கேஸ் அவர்களது ஏக்கத்தை போக்க ஒரு நல்ல தீர்வு. இந்த கேஸை கவர்ச்சிகரமாக டிசைன் செய்து சரியான ஒலியை கண்டறிந்து உருவாக்குவது சிறிது சிரமமாகவே இருந்ததாக க்ராக்பெர்ரி கெவின் தெரிவித்துள்ளார். கவர்ச்சிகரமான டிசைனிற்காக மட்டுமின்றி, இந்த கேஸினால் சில நன்மைகளும் உள்ளது. இன்று பொரும்பாலான அலுவலக வேலைகளை ஸ்மார்ட்போனிலேயே செய்வது அதிகரித்துவிட்டது.

எனவே டாக்குமென்ட்கள் டைப் செய்வதற்கு இந்த கீபோர்ட் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சில ஷார்ட்கட் (Shortcut) அம்சங்களுடன் வரும் இந்த கீபோர்டை க்ளிக்ஸ் ஆப் மூலமும் கன்ட்ரோல் செய்துகொள்ளலாம். இது ஐபோனின் சார்ஜிங் போர்ட்டுடன் இணைத்து பயன்படுத்தலாம். கேஸில் உள்ள போர்ட் மூலம் போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த ஐபோன் கேஸ் வரும் வாரம் லாஸ் வேகஸில் நடைபெறவுள்ள கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் அறிமுகம் செய்யப்படும். ரூ. 11,558க்கு இப்போது முன்பதிவு செய்யப்படும் இந்த கேஸ்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுமாம்.

Best Mobiles in India

English summary
Clicks iPhone Keyboard Case Gives The iPhone Pro Physical QWERTY Keys Keyboard Mobile Case Experience
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X