Home
News

புது ரூல்ஸ்.. ஆக.1 முதல் அமல்.. 1000 ரூபாயோ.. 10000 ரூபாயோ.. பேங்க், டீமேட், பாலிசி அக்கவுண்ட்.. புது மாற்றம்!

புதிய பேங்க் அக்கவுண்ட், டீமேட் அக்கவுண்ட், இன்சூரன்ஸ் பாலிசி அக்கவுண்ட் என்று எந்த நிதி தொடர்பான சேவைகளிலும் ரூ.1,000 பேட்டாலும் சரி, ரூ.10,000 போட்டாலும் சரி அடையாள வெரிபிகேஷன் செய்வதில் புதிய விதிகள் வருகின்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

இந்தியாவில் பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது, இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அல்லது டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது போன்ற எந்த நிதி தொடர்பான சேவைகளையும் பெறுவதற்கு கேஒய்சி (KYC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (Know Your Customer) என்னும் நடைமுறை கட்டாயமாகும்.

புது ரூல்ஸ்.. ஆக.1 முதல் அமல்.. 1000 ரூபாயோ.. 10000 ரூபாயோ.. பேங்க்!

அதாவது, இதில் ஆதார், பான், முகவரி உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அதே நேரத்தில் பதிவு செய்து கொள்ளப்படும். இந்த கேஒய்சி விவரங்கள் பெரும்பாலும் மாறாது. கஸ்டமர்களின் உண்மையான விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். டிஜிட்டலாக இந்த விவரங்கள் சேமிக்கப்படுவதால், பேப்பர்லெஸ் வெரிபிகேஷனுக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

மேலும், சில நிமிடங்களில் ஒருவருடைய அடையாளங்களை வெரிபிகேஷன் செய்து கொள்ள முடியும். கஸ்டமர்களுக்கு உடனடியாக சேவைகளையும் கொடுக்க முடியும். ஆனால், இதுபோன்ற நிதி சேவைகளை பெறும்போது மீண்டும் மீண்டும் கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு ஆனது சிகேஒய்சி 2.0 (CKYC 2.0) ஐ கொண்டுவந்துள்ளது.

சிகேஒய்சி 2.0 என்று சுருக்கமாக அழைக்கப்படும் சென்ட்ரல் கேஒய்சி 2.0 (Central KYC 2.0) ஆனது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. ஆகவே, பேங்குகள் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்த புதிய கேஒய்சி அமைப்பை பயன்படுத்தி கஸ்டமர்களுக்கு சேவைகளை வழங்கும். ஆகவே, வெரிபிகேஷனுக்கு இதை பயன்படுத்த இருக்கின்றன.

பிறகு மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் வழங்குநர்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களும் இதில் இணைக்கப்பட உள்ளன. ஆகவே, இந்த நிறுவனங்கள் கஸ்டமர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும்போது அடையாளங்களை வெரிபிகேஷன் செய்ய தனித்தனியாக ஆவணங்களை கேட்காது. மத்திய அரசின் இந்த புதிய சிகேஒய்சி 2.0 அமைப்பை பயன்படுத்தி வெரிபிகேஷன் செய்து கொள்ளும்.

இந்த அடையாள வெரிபிகேஷன் ரியல் டைமில் (Real-time) செய்யப்படுவதால், சேவைகள் உடனடியாக கஸ்டமர்களுக்கு கிடைக்கும். ஏற்கனவே, நாடு முழுவதும் கோடிக்கணக்கான கஸ்டமர்களின் கேஒய்சி விவரங்கள் மத்திய அரசின் பதிவேட்டில் இருக்கின்றன. ஆகவே, இது பல முறை வெரிபிகேஷன் செய்யப்பட்டவையாக இருப்பதால, துல்லியமான விவரங்களாகவே இருக்கும்.

இருப்பினும், கேஒய்சி விவரங்களில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருப்பதால், கஸ்டமர்களின் அனுமதியின்றி எந்தவொரு நிறுவனங்களும் இதை பயன்படுத்திவிட முடியாது. கஸ்டமர்களின் அனுமதிக்கு பிறகே கேஒய்சி விவரங்கள் வெரிபிகேஷன் செய்யப்படும். அதாவது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும்.

இந்த ஓடிபியை கஸ்டமர்களே நிறுவனங்களிடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே, சிகேஒய்சி 2.0 தளத்தில் இருந்து கஸ்டமர்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வெரிபிகேஷனுக்காக பகிரப்படும். ஆகவே, பேங்கோ, இன்சூரன்ஸ் அல்லது எந்த நிதி நிறுவனமோ கஸ்டமர்களின் விவரங்களை பெற விரும்பினால், ஓடிபி வழியாக ஒப்புதல் பெற வேண்டும்.

இப்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து ஓடிபி நம்பரை பெற்ற பிறகு அடையாள வெரிபிகேஷன் செய்யப்படுவதால், நிறுவனங்களும் கஸ்டமர்களின் உண்மைத்தன்மையை அறிய முடியும். இது கஸ்டமர்களுக்கும் சிரமம் இல்லாமல், நிதி சேவையை கொடுக்கும். இந்த சென்ட்ரல் கேஒய்சி 2.0 விதிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

Best Mobiles in India

English summary
CKYC 2.0 Rules From August 1 2026 For Digital Verifications Bank Account Holders Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X