ஆதார் தகவல்களை திரும்ப பெற வருகிறது புதிய சட்டம்.!

குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது,எனவே தான்ஆதார் சட்டத்தின் 57-வது பிரவு ரத்து செய்யபடுகிறது.

|

இந்தியாவில் அனைத்து முக்கிய இடங்களிலும் ஆதார் அட்டை தான் அதிகமாக பயன்பட்டு வந்தது, பின்பு சில நாட்களுக்கு முன்பு மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இந்த ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.

ஆதார் தகவல்களை திரும்ப பெற வருகிறது புதிய சட்டம்.!

இந்நிலையில் ஏற்கனவே இந்த ஆதாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்தது, இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பின்பு வங்கி கணக்கு மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை
கட்டாயம் இணைக்க வேண்டும் கெடு விதிக்கப்பட்டது.

ஆதார் சட்டம் 2016

ஆதார் சட்டம் 2016

பின்பு இந்த ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்து தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில்,
ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மேலும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் ‘‘அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.இருந்தபோதிலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுகாக்க வேண்டி கடமை அரசுக்கு உள்ளது என்றும், அதற்கு தகுந்த வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

மொபைல் இணைப்பு

மொபைல் இணைப்பு

குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது,எனவே தான்
ஆதார் சட்டத்தின் 57-வது பிரவு ரத்து செய்யபடுகிறது. பின்பு ஆதார் எண்ணுக்கு வேண்டி அரசின் சலுகைகள் நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே'' எனக் கூறி தீர்ப்பளித்தது.

திரும்ப பெற வாய்ப்பு

திரும்ப பெற வாய்ப்பு

இப்போது ஆதார் சட்டங்களில் பல்வேறு திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன, இந்த புதிய சட்டத்திருத்ததில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக ஆதார் தகவல்களை திரும்ப பெற வாய்ப்பும் உள்ளது. மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும்.

Best Mobiles in India

English summary
Aadhaar is Creeping Back Despite Supreme Courts Judgement: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X