பேஸ்புக்கில் சேவையை வழங்க சிட்டி பேங்க் திட்டம்!

Posted By: Staff

Citibank Planning Facebook Banking?

அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் உலக அளவில் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதுபோல் சிட்டி பேங்க்  சேவைக்கும் பெயர் பெற்றது.

அந்த வகையில் தற்போது சிட்டி பேங்க் தனது வங்கி நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை பேஸ்புக் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சேவையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கிவிட்டது.

தனது இந்த திட்டத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் செயல்படுத்தலாமா என்று அதிகாரப்பூர்வமாக என்ற சிட்டி பேங்க் கேள்வி கேட்டிருந்தது. அதற்குள் இந்த செய்தி எல்லா வாடிக்கையாளர்களையும் சென்று அடைந்துவிட்டது. சிட்டி பேங்கின் இந்த கேள்விக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து ஒரு கலவையான பதில்கள் வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக அதிகமாக இந்த பதில்களை அதிகம் அளித்தவர்கள் இந்தியர்களே. பலரின் கவலை வங்கி சேவையை சமூக வலைத் தளங்கள் மூலம் செய்யும் போது பாதுகாப்பு இருக்குமா என்பதாகும்.

சிட்டி பேங்க் வங்கி சேவையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. குறிப்பாக ஏடிஎம் மூலம் 24 மணி நேர வங்கி சேவை, மற்றும் ஒரு சில ஸ்மார்ட் பேங்கிங் சேவைகள் ஆகியவற்றை இந்த சிட்டி பேங்க்தான் ஆரம்பித்து வைத்தது.

ஆனால் வங்கி சேவையை பேஸ்புக்கில் கொண்டு வருவதில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி சிட்டி பேங்கை முந்திவிட்டது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஐசிஐசிஐ பேஸ்புக் பேங்கிங் அப்ளிகேசனை தனது வாடிக்கையாளர்களுக்காகத் தொடங்கிவிட்டது. பேஸ்புக் மூலம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தல், அக்கவுண்ட் ஸ்டேட்மென்டைப் பெறுதல் மற்றும் செக்புக்கிற்கான விண்ணப்பத்தைக் கோருதல் போன்ற சேவைகளை ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.

மேலும் ஐசிஐசிஐ பேஸ்புக் பேங்கின் அப்ளிகேசன் முழுமையான பாதுகாப்பைக் கொண்டது. ஏனெனில் இதில் செக்யூர் எஸ்எஸ்ல் கனெக்சன், 2 பேக்டர் அத்தண்டிகேசன் ப்ராசஸ் போன்றவை உள்ளன. மேலும் இந்த பேஸ்புக் சேவையை ஐசிஐசிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறது.

எனவே சிட்டி பேங்கின் புதிய பேஸ்புக் சேவை அதன் வாடிக்கையாளர்களைக்கு நிறைந்த பலனையும் அதே நேரத்தில் அதிக பாதுகாப்பையும் வழங்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot