Home
News

இனி சுஷாந்த் சிங் அந்த போட்டோவை பகிராதிங்க: சைபர் பிரிவு எச்சரிக்கை!

சுஷாந்த் சிங் இறந்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்ப வேண்டாம் என மகாராஷ்டிரா சைபர் பிரிவு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

மும்பை பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அறிந்த அனைத்து தரப்பினரிடமும் மனக்கவலையை ஏற்படுத்தியது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் இறந்தபோது அவரது வீட்டில் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்த் சிங் இறப்பு திரையுலகினர் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி முதல் நாட்டு மக்கள் ஏராளமானோர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டம்

இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டம்

சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவில் இருந்து லாக்டவுன் முடிந்தவுடன் மும்பைக்கு வந்து இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் மணப்பெண்ணின் பெயரை குடும்பத்தார் தெரிவிக்கவில்லை.

பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி

பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி

அதேபோல் சுஷாந்த் சிங் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பாலிவுட் வட்டாரங்கள் இருவரையும் காதல் ஜோடிகள் என தெரிவிக்கின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் உடனடியாக சமர்பிக்க கோரினர். அதன்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படம்

இதற்கிடையில் சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படம் கழுத்தில் தடத்துடன் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என மகாராஷ்டிரா போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா சைபர் போலீஸார்

இதுகுறித்து மகாராஷ்டிரா சைபர் போலீஸார் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளிக்கையில், இதுபோன்ற புகைப்படம் பரப்பப்படுவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது எனவும் இது மோசனை ரசனையை பிரதிபலிப்பதாகவும், இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புகைப்படம் பரப்புவதை நிறுத்த வேண்டும்

புகைப்படம் பரப்புவதை நிறுத்த வேண்டும்

இந்த புகைப்படங்கள் பரப்பப்படுவது உள்ளிட்டவை சட்ட நடவடிக்கைகளுக்கு புரம்பானது, இந்த புகைப்படம் பரப்புவதை நிறுத்துமாறு மகாராஷ்டிரா சைபர் க்ரைம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் இந்த புகைப்படங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
circulation of such sushant singh pictures is against legal guidelines: cyber warning
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X