Home
News

நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!

பிப்ரவரி 14 என்றால், அது காதலர் தினம் என்று இந்த காலத்தில் சிறிய குழந்தை கூட தெளிவாக கூறுகிறது. அந்த அளவிற்கு காதலர் தினம் உலகளவில் பிரபலமடைந்து விட்டது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோல், சினிமாவிற்காக காதலர் தினம் கொண்டாடப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இல்லை என்றால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

சினிமா லவ்வர்ஸ் டே (Cinema Lover's Day) என்ற பெயரில் நாளை, அதாவது, ஜனவரி 20 ஆம் தேதி உலக சினிமா காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தைக் கொலைக்களமானதாக மாற்ற நாளை நீங்கள் எந்த திரைப்படத்தைப் பார்க்க விரும்பினாலும், உங்களுடைய டிக்கெட் கட்டணமாக வெறும் ரூ.99 மட்டும் செலுத்தினால் போதும் என்று Inox நிறுவனம் கூறியுள்ளது. சூப்பர்ல.!

நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! எப்படி?

ஜனவரி 20 ஆம் தேதி (நாளை), நீங்கள் எந்த திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்தாலும், உங்களுடைய டிக்கெட் கட்டணமாக வெறும் ரூ.99 மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐனாக்ஸ் நிறுவனம் ஜனவரி 20 ஆம் தேதி சினிமா காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தைக் குஷியாக்கும் வகையில், எந்த படத்தை வேண்டுமானாலும் 99 ரூபாய் விலைக்கு பார்க்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது.

இதே சலுகையை PVR சினிமாஸ் மற்றும் CinePolis மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கூட வழங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது மக்களே.! வெறும் ரூ.99 விலையில் திரைப்பட டிக்கெட் சலுகையைப் பெற பார்வையாளர்கள் இப்போதிலிருந்தே டிக்கெட்களை புக்கிங் செய்யலாம். ஆனால், இதற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

முதல் விஷயம், 99 ரூபாய்க்கு அனைத்து இருக்கைகளும் கிடைக்காது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் எந்தத் திரைப்படத்தின் எந்தக் காட்சியையும் அடிப்படை விலையான ரூ.99 விலைக்கு முன்பதிவு செய்யலாம் என்றும் ஐநாக்ஸ் உறுதி செய்துள்ளது. சினிமா லவ்வர்ஸ் டே ஐநாக்ஸ் திரைப்பட டிக்கெட் ஆஃபர் இப்போது முதல் துவங்கி ஜனவரி 20 வரை லைவில் இருக்கும்.

ஜனவரி 20 ஆம் தேதி எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்கள் ரூ.99க்கு எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் பார்க்கலாம். பிரதான இருக்கைகளை மட்டும் ரூ.99க்கு முன்பதிவு செய்ய கிடைக்கும், சாய்வு இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தை ஐநாக்ஸ் வசூலிக்கும். அதேபோல், 4DX, IMAX திரைப்பட அனுபவம் கொண்ட டிக்கெட்கள் வழக்கமான விலையில் வழங்கப்படும்.

நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! எப்படி?

முக்கியமாக, குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்த சலுகை இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. சில நகரங்கள் மற்றும் மாநிலங்கள் 99 ரூபாய்க்கு மேல் சற்று கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டிய விலை உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் உள்ள திரைப்பட பார்வையாளர்கள் திரைப்பட டிக்கெட்டுக்கு ரூ.112 செலுத்த வேண்டும்..

இதற்கு மேல், நாடு முழுவதும் வசூலிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி கட்டணமும் பொருந்தும். சண்டிகர், பதன்கோட் மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில நகரங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ.99 திரைப்பட டிக்கெட் சலுகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளைத் தவிர BookMyShow மற்றும் Paytm இல் கூட இந்தச் சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகில் உள்ள எந்த திரையரங்கில் இந்த சலுகை கிடைக்கிறது என்று உடனே கமெண்ட் செய்யுங்கள். மற்ற சினிமா காதலர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கட்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Cinema Lover's Day 2023: How to book any movie ticket for just Rs 99 only via online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X