அமெரிக்க உளவுத்துறையில் நுழையும் நவீன ரோபோக்கள்: எதற்கு?

செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும்.

|

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிகளவு வளர்சியடைந்துள்ளது, மேலும் வியக்கவைக்கும் வகையில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA)-வில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. குறிப்பாக இந்த நவீன ரோபோக்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது உள்ள சில ரோபோ மாடல்களில் மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது இல்லாத ஒரு விஷயமாக உள்ளது.

அமெரிக்க உளவுத்துறையில் நுழையும் நவீன ரோபோக்கள்: எதற்கு?

அமெரிக்க உளவு அமைப்பில் பணியமர்த்தப்பட உள்ள ரோபோக்கள் Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ரோபோ மாடல்கள் தானாக சிந்திக்கும் திறமையைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

 வேலை:

வேலை:

அமெரிக்க உளவு அமைப்பு பணியில் இருப்பவர்கள் சிலர் தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது மற்றும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவாகும் வீடியோக்களில் குற்றவாளிகளை கண்டறிவது போன்ற வேலை செய்வதுண்டு. தற்சமயம் இவர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் செய்ய உள்ளது.

டான் மேவ்ரிக்ஸ்:

டான் மேவ்ரிக்ஸ்:

அமெரிக்க உளவு அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குநர் டான் மேவ்ரிக்ஸ் தெரிவித்தது என்னவென்றால் ஏற்கனவே தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது போன்ற பணியில் இருந்த அதிகாரிகள், மறைந்து வாழும் உளவாளி வேலைகளை மட்டுமே இனி செய்வார்கள். மற்றபடி அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில்:

விரைவில்:

தானாக சிந்திக்கும் திறமைக் கொண்ட ரோபோக்கள் விரைவில் இன்னும் சில மாதங்களில் உருவாக்கப்படும் என சிஐஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்பின்பு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு இந்த வருடத்தில் இறுதிக்குள் இந்த ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
மற்ற நாடுகள் வேவு பார்க்கிறதா:

மற்ற நாடுகள் வேவு பார்க்கிறதா:

விரைவில் வெளிவரும் இந்த ரோபோக்களின் சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற நாடுகள் ஆளில்லா ட்ரோன் வகை கேமராக்களில் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
CIAs Next Super Spy Could be Artificial Intelligence; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X