Google ஆண்டவரின் அடுத்த அதிரடி; Chrome ப்ரவுஸரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

|

பொதுவாகவே ஒரு "தயாரிப்பு" எவ்வளவு எளிமையாக உள்ளதோ, அது அவ்வளவு அதிகமாக பயன்படுத்தப்படும். ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக கூகுள் க்ரோமை (Google Chrome) கூறலாம்.

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், அதன் க்ரோம் ப்ரவுஸரை அதிக பேர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியான அப்டேட்களை வழங்கி வருகிறது.

அதனொரு பகுதியாக கூகுள் க்ரோமின் டவுன்லோட்ஸ் மெனுவில் (Downloads Menu) ஒரு தரமான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதென்ன அம்சம்? அதன் நன்மைகள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

புதிய ட்ராக்-அன்ட்-டராப் அம்சம்!

புதிய ட்ராக்-அன்ட்-டராப் அம்சம்!

கூகுள் நமது ப்ரவுஸிங் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய யூசர் இன்டர்பேஸை உருவாக்கி வருகிறது. இதன்கீழ், கூகுள் அதன் இன்டர்நெட் ப்ரவுஸர் ஆன க்ரோமிற்கான புதிய டவுன்லோட் யூசர் இன்டர்பேஸை (User Interface - UI) உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு ரெடிட் (Reddit) யூசரால் கண்டுபிடிக்கப்பட்டபடி, க்ரோம் யூசர்கள் இப்போது இன்டர்நெட் ப்ரவுஸரில் உள்ள டவுன்லோட் மெனுவிற்குள்ளும் மற்றும் டவுன்லோட் மெனுவில் இருந்தும் ஃபைல்களை எளிமையாக ட்ராக்-அன்ட்-டராப் (Drag-and-Drop) செய்ய முடியும்.

இது க்ரோம் கேனரி அப்டேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம்!

இது க்ரோம் கேனரி அப்டேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம்!

இந்த புதிய அம்சம் க்ரோம் கேனரி (Chrome Canary) அப்டேட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், கூகுள் பல்வேறு டேப்களை ம்யூட் செய்வதற்கும், அன்மியூட் செய்வதற்குமான ஆதரவை வழங்கும் ஒரு அம்சத்தையும் சோதித்து வருவதாகவும் தகவல் வெளியானது. அந்த அம்சமும் கூட, கூகுள் க்ரோம் கேனரியின் லேட்டஸ்ட் (அன்ஸ்டேபிள்) வெர்ஷனிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Windows 11 டிப்ஸ்: எந்த சாப்ட்வேரும் இல்லாமல் Screen Record செய்வது எப்படி?Windows 11 டிப்ஸ்: எந்த சாப்ட்வேரும் இல்லாமல் Screen Record செய்வது எப்படி?

ட்ராக்-அன்ட்-டராப் அம்சத்தினால் என்ன பயன்?

ட்ராக்-அன்ட்-டராப் அம்சத்தினால் என்ன பயன்?

ரெடிட் யூசர்களில் ஒருவரான லியோபேவா (Leopeva), கூகுள் நிறுவனம், கூகுள் க்ரோம் கேனரி அப்டேட்டிற்கான புதிய டவுன்லோட் யுஐ-யை உருவாக்கி வரும் தகவலை ரெடிட் வழியாக பகிர்ந்து உள்ளார்.

இந்த புதிய யுஐ-யின் (UI) கீழ், க்ரோம் கேனரி அப்டேட்டின் அன்ஸ்டேபிள் வெர்ஷன் ஆனது ட்ராக்-அன்ட்-டராப் அம்சத்தை பெறும் என்பது போல் தெரிகிறது.

இதன் கீழ் யூசர்களால், தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள க்ரோம் ப்ரவுஸரின் டவுன்லோட் மெனுவிற்கு, , ஃபைல்களை நேரடியாக நகர்த்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சம், மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வராது என்றாலும் கூட, க்ரோம் யூசர்களுக்கு - பணிச்சுமை மிக்க சூழல்களில் - நிச்சயம் சில நொடிகளை சேமிக்க உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம் .

டேப்-களை ம்யூட் மற்றும் அன்ம்யூட் செய்யும் அம்சம்!

டேப்-களை ம்யூட் மற்றும் அன்ம்யூட் செய்யும் அம்சம்!

இன்னொரு சமீபத்திய அறிக்கையின்படி, க்ரோம் ப்ரவுஸர் யூசர்கள், ஒரே ஒரு கிளிக்கின் வழியாக டேப்-களை ம்யூட் மற்றும் அன்ம்யூட் செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சமும் வெளியாக உள்ளது.

இந்த அம்சம் கூகுள் க்ரோம் அல்லது கூகுள் க்ரோம் கேனரியின் லேட்டஸ்ட் (அன்ஸ்டேபிள்) வெர்ஷனில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வீடியோ விளம்பரம் அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற பிளேபேக் வீடியோவானது தானாக இயக்கப்படும் போது இந்த அம்சம் தன் வேலையை செய்ய தொடங்குமாம்.

செக்யூரிட்டி தொடர்பான அப்டேட்களுக்கும் பஞ்சம் இல்லை!

செக்யூரிட்டி தொடர்பான அப்டேட்களுக்கும் பஞ்சம் இல்லை!

இந்த ஜூன் மாத தொடக்கத்தில், கூகுள் நிறுவனம் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸிற்கான க்ரோம் வெர்ஷன் 102.0.5005.115-ஐ வெளியிட்டதாக தெரிகிறது. இந்த புதிய அப்டேட் மொத்தம் ஏழு செக்யூரிட்டி குறைபாடுகளை சரி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மிகவும் மோசமான செக்யூரிட்டி தொடர்பான அச்சுறுத்தல்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உடனே அப்டேட் செய்யச்சொல்லி எச்சரிக்கையும் வந்துள்ளது!

உடனே அப்டேட் செய்யச்சொல்லி எச்சரிக்கையும் வந்துள்ளது!

செக்யூரிட்டி அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, லேட்டஸ்ட் க்ரோம் அப்டேட்டிற்கு மாறுமாறு, இந்தியாவின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Computer Emergency Response Team of India), அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்ச்சர் ஏஜென்சி ( United States Cybersecurity and Infrastructure Agency) வலியுறுத்தியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகமொத்தம் க்ரோம் ப்ரவுஸர், காலப்போக்கில் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

ஏனெனில் மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து, "ஊடுருவும்" நோட்டிபிகேஷன்களை பிளாக் செய்வது, ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்ட்ளை ஆட்டோமேட்டிக் ஆக மாற்றுவது, மோசடியென கருதப்படும் வெப்சைட்களில் இருந்து யூசர்களை பாதுகாப்பது போன்ற பல அம்சங்களை க்ரோமில் காண முடிகிறது.

பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?

கலக்கும் க்ரோம்; போராடும் எட்ஜ்!

கலக்கும் க்ரோம்; போராடும் எட்ஜ்!

க்ரோம் இப்போது 64% சந்தைப் பங்கை கொண்ட, உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இன்டர்நெட் ப்ரவுஸர் ஆக இருப்பதால், கூகுள் நிறுவனம் இதுபோன்ற அப்டேட்களை அடிக்கடி வெளியிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

முதல் இடத்தை பற்றி பேசிவிட்டோம்.. அடுத்தடுத்த இடங்களை பற்றி பேசும் போது, இரண்டாவது இடத்தில் சஃபாரி (19%) உள்ளது, மைக்ரோசாப்டின் க்ரோமியம் (Chromium) இன்ஜினின் கீழ் இயங்கும் எட்ஜ் ப்ரவுஸர் ஆனது 4% ஐ தாண்ட போராடி வருகிறது.

மேலும் இதுபோன்ற லேட்டஸ்ட் அப்டேட்ஸ் மற்றும் டெக் நியூஸ்களை அறிந்துகொள்ள கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தை பின்தொடரவும்.

Best Mobiles in India

English summary
Google seems Working on a new feature in Chrome Browser's download menu That helps users Drag and Drop files. Check full details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X