அறிய வாய்ப்பு., ரூ.1 கோடி பரிசு:15 வினாடி வீடியோ போதும்- காமெடி, நடிப்பு, பாடல் இதில் திறமை இருக்கா?
டிக்டாக் செயலிக்கு இணை மாற்றாக கருதப்படும் சிங்காரி செயலியில் அட்டகாச அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வீடியோ பதிவேற்றாளர்கள் ரூ.1 கோடி வரை பரிசு வெல்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிக்டாக் இணை மாற்றான செயலி
டிக்டாக் செயலிக்கு இணை மாற்றாக கருதப்படும் சிங்காரி செயலியில் அட்டகாச அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வீடியோ பதிவேற்றாளர்கள் ரூ.1 கோடி வரை பரிசு வெல்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

59 சீன செயலிகளுக்கு தடை
டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றது.

டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவு
டிக்டாக் செயலியில் இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவுகள் எடுத்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் செயலி முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சிங்காரி செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது
நாட்டில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்களை மேற்கோளிட்டு பிரபலமான 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்துள்ளது. டிக்டாக் செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலியான சிங்காரி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
சிங்காரி செயலியும் டிக்டாக் போன்றே ஒரு குறுகிய வீடியோ பகிர்வு செயலியாக இருக்கமுடியும். அதுமட்டுமின்றி குறுகிய வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்க இந்த வீடியோ அனுமதிக்கிறது. சிங்காரி செயலியில் குறுகிய கால வீடியோ பயன்பாட்டின் மூலம் பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. வீடியோ வைரலாகியதன் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக விளையாட்டு மண்டலம் உள்ளது, அதில் விளையாடுவதற்கு அனுமதிப்போடு விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்
இந்த செயலியானது ஆங்கிலம், தமிழ், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது.

தனியுரிமைக் கொள்கை பற்றிய விவரங்கள்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தனியுரிமைக் கொள்கை பற்றிய விவரங்களையும் நிபந்தனைகளையும் காண்பிக்கிறது. இதில் கணக்கை உருவாக்குவதற்கு தொலைபேசி எண்களை பதிவிட வேண்டும். வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தகவலையும் பகிரவோ விற்கவோ இல்லை என தெரிவிக்கிறது.

மூன்று பிரிவுகளாக பிரிப்பு
அதன்பின் சிங்காரி செயலியில் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தலாம். இதில் பயன்பாடு, வீடியோக்கள் மற்றும் விளையாட்டு மண்டலம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

Talent Ka Mahasangram
சிங்காரி செயலி தற்போது Chingari Stars: Talent Ka Mahasangram என்ற பெயரில் நிகழ்வு ஒன்று தொடங்கியுள்ளது. இதில் படைப்பாளர்களுக்கு மகாசிங்கிராம் நிகழ்வின் கீழ் ரூ.1 கோடி பரிசு வழங்கப்போவதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டிள் உள்ள திறமைமிக்கவர்களுக்கு இடம் கொடுக்கும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த படைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிங்காரி ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் மற்றும் தேசியம் என இரண்டு பிரிவு
இந்த நிகழ்ச்சியானது மாநிலம் மற்றும் தேசியம் என இரண்டு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் பயனர்கள் தங்களது வீடியோக்களை பாடல், நடனம், மிமிக்ரி, நகைச்சுவை என பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை பதிவேற்றலாம் எனவும் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 முதல் 30 வினாடிகள் வரையிலான வீடியோ
சுமார் 15 முதல் 30 வினாடிகள் வரையிலான வீடியோக்களை இதில் பதிவேற்றலாம் எனவும் இதில் பகிர்வு முறை உட்படுத்தப்பட்டது எனவும் லைக்குகள் பகிர்வுகள் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் 10 போட்டியாளர்கள் வாக்களிப்பின்படி பட்டியலிட்டு ரூ.5 லட்சம் பரிசாக பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி பரிசு
இதில் சிறந்த 10 போட்டியாளர்கள் ஒருவர் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1 கோடி பரிசு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://chingari.io/star என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications