எச்சரிக்கை! தீபாவளி பரிசு என மோசடி.. தகவலை திருட காத்திருக்கும் ஹேக்கர்கள்! ஆபத்து உறுதி

|

தீபாவளி நாள் நெருங்கிவிட்டது. ஆன்லைன் தளங்கள் உட்பட சில்லறை வியாபாரிகள் வரை அனைவரும் தீபாவளி பரிசுகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் ஹேக்கர்கள் தங்களது சித்து விளையாட்டை தொடங்கி விட்டனர். கொரோனா பரவலின் போது இருந்த இக்கட்டான காலத்தில் கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் மோசடி செய்து இந்தியர்களின் வாழ்க்கையில் விளையாடிய கயவர்கள் தீபாவளி பரிசு என்ற பேரில் மோசடி செயல் செய்வதில் வியக்க ஒன்றுமில்லை.

தீபாவளி பரிசு என்ற பெயரில் மோசடி

தீபாவளி பரிசு என்ற பெயரில் மோசடி

இந்தியாவின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவான (CERT-In) தீபாவளி பரிசு மோசடிகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி CERT-In ஆலோசனை வெளியிட்டிருக்கிறது. தீபாவளி பரிசு என்ற பெயரில் அப்பாவி பயனர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்துப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கையோடு இருப்பது கட்டாயம்

எச்சரிக்கையோடு இருப்பது கட்டாயம்

பயனர்களுக்கு முதலில் ஒரு இணைப்பு அனுப்பப்படுகிறது. நம்பகத்தனமான நன்மைகளை வழங்குவது போன்ற பின்பம் இந்த லிங்க் இல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதை நம்பி பரிசுகளை பெற விரும்பி இணைப்பை கிளிக் செய்யும் அப்பாவி இந்தியர்களின் தகவல்கள் இதன்மூலம் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இணைப்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து எச்சரிக்கையோடு இருப்பது கட்டாயம்.

ஃபிஷிங் இணைப்புகள் உடன் தீபாவளி பரிசு

ஃபிஷிங் இணைப்புகள் உடன் தீபாவளி பரிசு

இலவச தீபாவளி பரிசு என்ற பேரில் பயனர்களை ஏமாற்றும் செயலை பல இணைய மோசடியாளர்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். இதுகுறித்து இந்தியாவின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு சில சீன இணையதளங்கள் இலவச தீபாவளி பரிசுகள் என்ற பெயரில் பயனர்களுக்கு ஃபிஷிங் இணைப்புகளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் ஆனது பயனர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசமான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பாக இருக்கும்படி CERT ஆலோசனை

பாதுகாப்பாக இருக்கும்படி CERT ஆலோசனை

ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி CERT-In ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

அதில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை ஆஃபர் என கூறி பரிசு இணைப்புகள் அனுப்பப்படுகிறது. இந்த இணைப்பை சக நண்பர்களிடம் பகிரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த இணைப்பை கிளிக் செய்வதன்மூலம் மோசடி செயல்கள் தொடங்குகிறது. என CERT-In ஆலோசனையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மெசேஜ்களை பகிரவும் வேண்டாம், தொடவும் வேண்டாம்

மெசேஜ்களை பகிரவும் வேண்டாம், தொடவும் வேண்டாம்

இதுபோன்ற வலைதளங்களில் பெரும்பாலானவை .cn என்ற டொமைன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபிஷிங் வலைதளங்களில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்தவை என CERT-in விளக்கி உள்ளது. தயவு செய்து எந்தவித அதிகாரப்பூர்வமற்ற மெசேஜ்களை பகிரவும் வேண்டாம் இதில் உள்ள லிங்க்களையும் எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யவும் வேண்டாம். கேட்கப்படும் எந்த தகவலையும் நிரப்ப வேண்டாம், குறிப்பாக கிளிக் செய்யவே வேணாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கிளிக் செய்தால் என்ன நடக்கும்?

கிளிக் செய்தால் என்ன நடக்கும்?

பயனர்கள் முதலில் ஒரு இணைப்பை பெறுகிறார்கள், இது அவர்களுக்கு நம்பத்தகாத நன்மைகளை உறுதி அளிக்கிறது. பரிசுகளை பெற பயனர்கள் இணைப்பை கிளிக் செய்யும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

பயனர்கள் லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் போலி வாழ்த்து செய்தியுடன் வரவேற்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது, அனைத்து விவரங்களும் நிரப்பப்பட்ட உடன் பரிசுகளை பெற இதை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பகிரும் படி கேட்கப்படுகிறார்கள்.

இந்த நடைமுறையின் போது உங்கள் தனிப்பட்ட தரவு உள்ளிட்ட அனைத்தையும் கயவர்கள் பெற்றுவிடுகிறார்கள்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள்

கொஞ்சம் யோசித்து பாருங்கள்

எச்சரிக்கையாக இருப்பது அவசியம், நீங்கள் மோசடிகளை தவிர்க்க இணைப்புகளின் உண்மைத் தன்மையை அறிவது முக்கியம். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பேரில் ஒரு லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்தால் அதிகாரப்பூர்வ தளம் போன்று வேறு தளத்துக்கு அனுப்பப்படுகிறீர்கள். அதில் மொத்த தகவலும் திருடப்படுகிறது.

யோசித்து பாருங்கள், தேவையில்லாமல் அவர்கள் ஏன் உங்களுக்கு பரிசளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் அதீத விலைக்குறைப்பு வழங்க என்ன காரணம் என்று. அதிகாரப்பூர்வ இணையதளத்தை நீங்களே டைப் செய்து அதற்குள் நுழைந்து சோதித்து பாருங்கள். நேரடியாக லிங்க்கிற்குள் நுழைவதை தவிர்க்கவும்.

பாதிப்புக்கு உள்ளாக வேண்டாம்

பாதிப்புக்கு உள்ளாக வேண்டாம்

எனவே எந்த ஒரு தகவலையும் லிங்க்கையும் உறுதி செய்வது அவசியம். டொமைன் பெயர்கள் சரிபார்க்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிகாரமற்ற தகவலையும் பகிர்ந்து நீங்கள் பாதிப்படைவதோடு பிறரையும் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Chinese Websites Steal Your Information as the name of Diwali Gifts: CERT Caution

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X