Home
News

இராணுவ உளவு.. இனிமேல் தேனீக்கள் போதும்.. அதிர்ச்சி கொடுக்கும் சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்.. இதோ முழு விவரம்

அவ்வப்போது அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. சில அதிநவீன சாதனங்கள் பல்வேறு துறைகளில் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் மிகவும் இலகுவான மூளைக் கட்டுப்பாட்டுச் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். அதுவும் இது வெறும் 74 மில்லிகிராம் (74 milligrams) எடை கொண்டது.

குறிப்பாக இந்த சிறிய சாதனம் தேனீக்களின் மூளையில் நேரடியாக இணைக்கப்பட்டு, அவற்றின் இயக்கங்களை 90 சதவீதம் துல்லியத்துடன் கட்டுப்படுத்துகின்ற என தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இதன் மூலம் தேனீக்களை உளவு பார்க்கவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் உதவும் வகையில் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள் பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த பேராசிரியர் ஜாவோ ஜீலியாங் தலைமையிலான குழுவினர்.

இராணுவ உளவு.. அதிர்ச்சி கொடுக்கும் சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்..

பொதுவாகத் தேனீக்கள் தங்கள் உடல் எடையில் 80 சதவீதம் எடையுள்ள தேன் பைகளைச் சுமந்து பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயற்கையின் அற்புதத்தை பயன்படுத்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த பேராசிரியர்கள் இந்த சாதனத்தைத் தேனீயின் முதுகில் பொருத்தி, மூன்று ஊசிகள் மூலம் மூளையுடன் இணைத்து தேனீக்களை (cyborg bee) குறிப்பிட்ட திசைகளில் பறக்க வைத்து அசத்தியுள்ளனர்.

அதேபோல் இந்த புதிய தொழில்நுட்பம் The Last of Us எனும் வீடியோ கேம் மற்றும் தொடரில் காணப்பட்ட கார்டிசெப்ஸ் பூஞ்சையை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இந்த பூஞ்சை பூச்சிகளை மாற்றி அவற்றின் உடலைக் கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது. இதேபோலத் தான் இந்த சாதனம் பாலிமர் பிலிமில் அச்சிடப்பட்ட மின் சுற்றுகளைப் பயன்படுத்தி தேனீக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை நீண்ட தூரம் குறிப்பிட்ட பாதைகளில் செலுத்த முடிகிறது.

குறிப்பாக இந்த புதிய சாதனம் எதிர்காலத்தில் இராணுவ உளவு, பேரிடர் மீட்பு, மற்றும் குற்றத்தடுப்பு ஆகியவற்றில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம். அதுவும் தேனீக்கள் இயற்கையாகவே மறைந்து செயல்படுவதால், இவை உளவு பார்க்கவும், பூகம்பம் போன்ற பேரிடர்களில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்த புதிய தொழில்நுட்பம் ஒரு புதிய கண்காணிப்பு முறையை உருவாக்கி, ஒவ்வொரு பூச்சியும் ஒரு உளவாளியாக மாற வாய்ப்புள்ளது என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது. அதேபோல் இந்த சாதனம் கம்பி மூலம் மின்சாரம் பெறுகிறது என்று கூறப்படுகிறது. பின்பு பேட்டரிகள் சேர்த்தால் எடை கூடுவதால் பூச்சிகள் விரைவில் களைத்து விடுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ உளவு.. அதிர்ச்சி கொடுக்கும் சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்..

வரும் காலங்களில் மிகப்பெரிய பயன்பாடுகளுக்கு இது போன்ற சாதனங்கள் உதவ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் எனவும் கூறுகின்றனர்.

ஆனாலும் உலகில் நாள்தோறும் பல்வேறு வகையான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் எத்தனை எல்லோருக்கும் பயன்படும் விதமாகவோ, நன்மைதருவனவாகவோ இருக்குமா அல்லது இருக்காத என சந்தேகங்கள் பல உள்ளன. தற்பேது சீனாவின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் நன்மைக்கு மட்டுமா, அல்லது புதிய அச்சுறுத்தல்களை உருவாக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

photo credit: pexels.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Chinese scientists have created cyborg bee with brain chip: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X