1374 நடனமாடும் ட்ரோன்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்த சீன நிறுவனம்.!
அமெரிக்க நிறுவனம் ஒன்று 1218 டிரோன்களை தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது பறக்கவிட்ட டிரோன்களை சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவை சேர்ந்த ஒரு டிரோன் நிறுவனம் 13 நிமிடங்கள் ஒரே சமயத்தில் பறக்கக் கூடிய அதிகளவிலான டிரோன்களை பறக்காவிட்டு புதிய கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த சாதனையில் 1,374 டிரோன்கள் ஒரு கிலோமீட்டருக்கு மேல் பறந்தது.

சீன நிறுவனமான யூஏவி ஃபர்ம் என்ற நிறுவனம் செய்த சாதனை, இதற்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று 1218 டிரோன்களை தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது பறக்கவிட்ட டிரோன்களை சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாய்று அன்று சீனாவின் முக்கிய சுற்றுலா நகரமான சியான் என்ற பகுதியில் இரவில் 16 வித்தியாசமான 3டி ட்ரோன்களை பறக்கவிட்டது. இந்த ட்ரோன்கள் ஒட்டகம், புத்தர் மற்றும் அதிவேக ரயில் போன்ற வடிவங்களில் பறந்து கண்களுக்கு விருந்தாக்கியது.
சீனாவின் நிறுவனங்கள் இதுபோன்ற தயாரிப்புகளில் உலகின் முக்கிய நிறுவனங்களை விட சிறந்ததாக விளங்குகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து முக்கியமான பொருட்கள், செமி கண்டக்டர்கள், ரோபோட் மற்றும் ட்ரோன்களை இறக்குமதி செய்வது குறைந்துள்ளது.

ட்ரோன்கள் உற்பத்தி என்பது சீனாவின் அனைத்து அரசியல் கட்சிகளில் முக்கிய கொள்கையாக உள்ளது. சீன அதிபர் சி ஜின் பிங் அவர்கள் இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்வதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் இன்னொரு டெக்னாலஜி நிறுவனம்கான டபிள்யூஎல் இண்டலிஜெண்ட் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட் என்றநிறுவனம் ஒரே நேரத்தில் அதிகளவு ரோபோக்களை அதாவது 1069 ரோபோக்களை நடனம் ஆட வைத்து புதிய சாதனை செய்தது. ஆனால் இந்த சாதனையை இத்தாலிய நிறுவனம் ஒன்று 1372 ரோபோட்டுக்களை நடனம் ஆட வைத்து முறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈஹாங் என்ற நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு பயணிகள் ட்ரோன்களை #300,000 விலையில் செய்ய முடிவு செய்தது. இந்த ஆண்டு இந்த ட்ரோன் முழுமையான வடிவத்திற்கு வரும் என்றும், இந்த ரோபோட் வாகனத்தில் ஒரு நபர் மணிக்கு 130 கிலோ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே ராணுவத்திற்கு அல்லாத ட்ரோன்களை தயார் செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் புதிய முயற்சி மிக விரைவில் வெற்றியில் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications