பிஞ்சு குழந்தையை விற்று ஐபோன் வாங்கியவர் கைது.!!

Written By:

ஐபோன் கருவியின் விலை அதிகம் என்றாலும், பலரும் அதனை வாங்க விருப்பம் கொள்கின்றனர். அதன் தரம் மற்றும் பிரான்ட் என இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முன்னதாக ஐபோன் வாங்க சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயன்று உலகம் முழுக்க பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பிஞ்சு குழந்தையை விற்று ஐபோன் வாங்கியவர் கைது.!!

இம்முறை சீறுநீரகத்தை விற்பனை செய்யாமல் பிறந்து 18 மாதங்களான தங்களது குழந்தையையே விற்பனை செய்ய சீன தம்பதி முடிவு செய்து குழந்தையை 23,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,38,000) க்கு விற்பனை செய்து விட்டனர்.

பிஞ்சு குழந்தையை விற்று ஐபோன் வாங்கியவர் கைது.!!

'ஏ டுயான்' 'சியோ மெய்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பாராமக நினைத்து அந்த பிஞ்சு குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குழந்தையை விற்பனை செய்த தம்பதியோடு சேர்த்து அதனை வாங்கியவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 குழந்தைகள் கடத்தப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக சீன ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

English summary
Chinese Couple Sells 18-Month-Old Daughter To Buy iPhone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot