Home
News

இதுதான் சீனா, இதுதான் சூழ்ச்சி..!?

ஒரே அளவிலான மக்கள் தொகை தொடங்கி பல ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும் சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா சில விடயங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது தான் நிதர்சனம்.

சீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..!

அப்படியாக, சீனாவோடு இந்தியாவை ஒப்பிடும் போது 2020-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 28 வயதிற்க்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது சீனாவில் இருப்பதை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவை விட இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் இருப்பார்கள். அதிக இளைஞர்கள் என்றால் அதிக வளர்ச்சி அதை சீன நிறுவனம் ஒன்றும் ஒற்றுக்கொண்டுள்ளது.

அறிமுகம் :

அறிமுகம் :

சீன நிறுவனமான சைனீஸ் இன்டர்நெட் மற்றும் டெக்னாஜலி எம்என்சி லீடிவி (Chinese internet and technology MNC Letv) சமீபத்தில் 120 இன்ச் அளவில் உலகின் மிகப்பெரிய டிவியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

வியாபார ரீதி :

வியாபார ரீதி :

அந்த நிறுவனம் 2016 ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியாவில் வியாபார ரீதியாக நுழைய திட்டமிட்டுள்ளது.

இந்திய பங்குதாரர்கள் :

இந்திய பங்குதாரர்கள் :

மேலும் இந்தியவில் உள்ள உள்ளூர் உள்ளடக்க வழங்குநர்கள்களை கொண்ட பங்குதாரர்களை எதிர் நோக்குக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட் சக்தி :

இன்டர்நெட் சக்தி :

லீடிவி நிறுவனத்தின் சிஇஓ-வான டின் மோக், இந்தியா மிக பெரிய அளவிலான இன்டர்நெட் சக்தியை கொண்ட நாடு என்றும் அது மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் :

டிஜிட்டல் இந்தியா திட்டம் :

இந்தியா இந்த வளர்ச்சியை அடைய இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

உதவி :

உதவி :

மேலும் இந்திய பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு 'க்ளவுட் கம்ப்யூட்டிங்' மூலம் தங்களால் ஆன உதவியை புரிவோம் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

வலிமை :

வலிமை :

அப்படியாக குறிப்பிடத்தக்க வகையில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் இன்டர்நெட் வலிமையானது உயரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பின்னடைவு :

பின்னடைவு :

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பல வகையான மொழி தான் சீன நிறுவனங்களுக்கு வியாபார ரீதியாக பெரும் பின்னடைவை தருகிறது என்பது தான் நிதர்சனம்.

திட்டம் :

திட்டம் :

அது போன்ற தடைகளை விரைவில் உள்ளூர் வியாபாரிகளை கொண்டு சரி செய்ய லீடிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று டின் மோக் கூறியுள்ளார்.

ஒப்பிடூ :

ஒப்பிடூ :

மேலும் லீடிவி நிறுவனமானது தங்களது கருவிகளை உலகின் தலை சிறந்த ஆப்பிள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடலாம் என்றும் உறுதியளித்துள்ளது.

சீனாவில் அறிமுகம் :

சீனாவில் அறிமுகம் :

மேலும் இந்த நிறுவனம் தனது ஜென் நெக்ஸ்ட் லீ 1எஸ் மொபைல் போனையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் :

விரைவில் :

அது மட்டுமின்றி லீ நிறுவனம் விரைவில் அந்த போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

2 ஆயிரம் டாலர் :

2 ஆயிரம் டாலர் :

அது மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது லீ நிறுவனம். அதன் விலை 2 ஆயிரம் டாலர் வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டி :

போட்டி :

லீ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஆனது, உலகிலேயே மிகவும் விலைக்குறைவான இந்தியாவின் டாடா நானோ காருக்கு போட்டியாக அல்லது இணையாக தயாரிக்கப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.

இந்திய சந்தை :

இந்திய சந்தை :

இப்படியாக, வியாபார ரீதியாக இந்திய சந்தைக்கு போட்டியாக இந்திய சந்தைக்குள்ளேயே மேலும் ஒரு சீன நிறுவனம் நுழைய காத்திருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

ஃபேஸ்புக் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் :

ஃபேஸ்புக் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் :

மேலும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லீடிவி நிறுவன சிஇஓ டின் மோக், ஃபேஸ்புக் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் போல உடை அணிந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தற்செயலா ?

தற்செயலா ?

அந்த உடை தேர்வு தற்செயலாக நடந்ததா இல்லை திட்டமிட்டு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
இந்தியாவின் வளர்ச்சியை ஒற்றுக்கொள்ளும் சீன நிறுவனம். வியாபார சூழ்ச்சியா..?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X