8000mAh எப்போது? ஏன் Apple, Samsung, Google போன்களின் Battery கெப்பாசிட்டி எப்போதுமே குறைவாகவே இருக்கிறது?
சைனீஸ் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களில் 6000mAh மற்றும் 7000mAh க்கும் அதிகமான கெப்பாசிட்டி கொண்ட பேட்டரிகளை பேக் செய்து கொண்டிருக்கும் மறுகையில், ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் இன்னமும் ஸ்மால் சைஸ் பேட்டரி உடன் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.
உதாரணத்திற்கு சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் 5,000mAh பேட்டரி உள்ளது; ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 4,685mAh பேட்டரி உள்ளது. சீன நிறுவனமான ஐக்யூ-வின் மிட்-ரேன்ஜ் மாடல் ஆன ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக - ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனில் 8300mAh பேட்டரி இடம்பெறலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் இந்த இடைவெளி? ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏன் சைனீஸ் ஸ்மார்ட்போன்களை போல "பிக் பேட்டரிகளை" பேக் செய்வது இல்லை? இந்த நீண்டநாள் குழப்பத்திற்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது. காலாவதியான விதிமுறைகள் (Outdated Regulations) தான் இதற்கு காரணம் என்று ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது!
உள்ளூரில் ஒன்னு.. அசலூரில் ஒன்னு! சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனானது 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதேபோல விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போனானதும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளன.

இவ்விரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் நெக்ஸ்ட் ஜெனெரஷன் மாடல்கள் ஆனது 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் பேட்டரி திறன்களை 7000mAh க்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதெல்லாம் சீன சந்தையில் மாட்டுமே நடக்கும். ஏனென்றால் சீனாவில் பிக் பேட்டரி உடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெர்ஷன்களுமே பெரும்பாலும் குறைக்கப்பட்ட பேட்டரி அளவுகளையே காண்கின்றன.
உதாரணத்திற்கு ஜெர்மனியில் அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5,410mAh பேட்டரி உள்ளது மற்றும் ஐரோப்பாவில் அறிமுகமான விவோ எக்ஸ் 200 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5,200mAh பேட்டரி உள்ளது. ஆனால் 2026 இல் எதிர்பார்க்கப்படும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அதே 5,000mAh பேட்டரி தான் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியான கேலக்ஸி எஸ20 அல்ட்ரா மாடலில் இருந்து இந்த பேட்டரி கெப்பாசிட்டி மாறாமல் உள்ளது.
இந்த பிரச்சினை யுஎஸ் ஃபெடரல் டிரான்ஸ்போர்டேஷன் ரெகுலேஷன்ஸ் (US Federal Transportation Regulation 49 CFR 173.185) போன்ற விதிமுறைகளிலிருந்து வருகிறது. இது லித்தியம்-அயன் பேட்டரி செல்களை 20Wh (அதாவது தோராயமாக 5,000mAh) ஆக கட்டுப்படுத்துகிறது. கிளாஸ் 9 என்கிற "ஆபத்தான பொருட்கள்" என்று இதை வகைப்படுத்தப்படுவதை தவிர்க்க, இந்த விதிமுறைகள் ஷிப்பிங் செலவுகளை அதிகரிப்பதாக @UniverseIce கூறுகிறது.இதேபோல ஐரோப்பிய யூனியன் (EU) கட்டுப்பாடுகளும் உள்ளன.
இதெல்லாம் சேர்ந்து தான் ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை பிக் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க, உலகளவில் விற்பனை செய்ய தடுப்பது போல் தெரிகிறது. இந்த விஷயத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புத்திசாலிதமான பாணியை பின்பற்றுகிறது. அதை நீங்கள் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது. இதுவொரு டூயல் செல் பேட்டரிகள் ஆகும்; ஒவ்வொரு செல்லும் 20Wh க்கும் குறைவாக இருந்தாலும் மொத்த திறன் 6000mAh ஆக உள்ளது. இது காலாவதியான விதிமுறைக்கு ஒரு நல்ல தீர்வாகும். 2026 ஆம் ஆண்டிற்குள் புதிய விதிமுறைகள் உருவாகாவிட்டால்.. பேட்டரி தொடர்பான இந்த ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பெரிய பேட்டரி என்றாலே ஆபத்தும் பெரிது.. இது உண்மையா? சீன நிறுவனங்கள் ஆனது 2026 ஆம் ஆண்டில் 7000mAh க்கும் அதிகமான கெப்பாசிட்டி கொண்ட பேட்டரிகளை குறிவைப்பதாக கூறப்படுகிறது,. அமெரிக்காவிற்கு செல்லும் "சிறிய பேட்டரி" ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது "பெரிய பேட்டரி" உடன் சீனாவிலிருந்து வரும் ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பற்றவையா?
நேற்றும், இன்றும் மட்டும் இல்லை.. பெரிய பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களின் மீது கடந்த பல ஆண்டுகளாகவே "ஒழுங்குமுறை கவலைகள்" இருக்கின்றன தான். அனால் சமீபத்திய தரவுகள் - பெரிய பேட்டரிகளுடன் தொடர்புடைய பேட்டரி தொடர்பான சம்பவங்களில் அதிகரிப்பு இல்லை என்பதை காட்டுகின்றன.
உண்மையில், பல சமீபத்திய பேட்டரி தொடர்பான சம்பவங்கள் சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கியுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் பேட்டரிகள் "பாதுகாப்பான அளவு" என்கிற வரம்புகளுக்குள் இருந்தாலும் கூட சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ஆக மொத்தம் தற்போதைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகளும், காலாவதியான தரநிலைகளும் மட்டுமே - இன்னும் பெரிய பேட்டரி கெப்பாசிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முன்னே நிற்கும் பெரிய தடையாகும்!


Click it and Unblock the Notifications