ஒன்றே வாங்க முடியலே, இவரு எட்டு வாங்கியிருக்காரு, அதுவும்..

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவி வெளியாகும் போது சிறுநீரக விற்பனை செய்தவர் கைது என பல்வேறு செய்திகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அரங்கேறும். இம்முறை இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறவில்லை என்றாலும், இது குறித்த மீம்களை இணையத்தில் காண முடிந்தது. ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 2 போன்ற கருவிகளை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தது.

நம்மில் பலரும் புதிய ஐபோன் வாங்கும் கனவு இருந்தும் நிதிநிலை காரணமாக வாங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் சீன வாலிபர் செய்திருக்கும் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாலிபர்

வாலிபர்

சீனாவைச் சேர்ந்த பணக்காரர் ஒருவரின் மகன் தனது நாய்க்கு எட்டு ஐபோன் 7 கருவிகளை வாங்கியுள்ளார்.

வியாபாரி

வியாபாரி

வாங் ஜியாலின் எனும் வியாபாரியின் மகனான வாங் சிகாங் என்பவர் கோக்கோ எனப் பெயரிடப்பட்டிருக்கும் தனது நாய்க் குட்டிக்கு எட்டு புதிய ஐபோன் 7 கருவிகளை வாங்கியுள்ளார்.

வெய்போ

வெய்போ

இத்தகவல் குறிப்பிட்ட நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதிப்பு

மதிப்பு

சீனாவில் ஐபோன் 7 விலை 6,388 மற்றும் 7,988 யுவான்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்திய மதிப்பில் முறையே ரூ.64,242.44/- மற்றும் ரூ.80,333.22/- ஆகும்.

கட்டணம்

கட்டணம்

தனது நாய்க்குட்டிகளுக்கு ஐபோன்களை வாங்க மட்டும் இந்திய மதிப்பில் ரூ.5,13,072.16/- வரை வாங் செலவிட்டுள்ளார். புதிய ஐபன் 7 கருவிகளில் ஹெட்போன் ஜாக் இல்லாதது குறித்து கோக்கோவின் கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Chinese Billionaire's Son Bought Eight iPhone 7s For His Dog Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot