சீனா-இந்தியா மீது பெரிய சைபர் தாக்குதலை நடத்தக்கூடும் - மக்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க!

|

சைபர் செக்யூரிட்டியுடன் பணிபுரியும் இந்திய ஏஜென்சிக்கு, சீனா, இந்தியா மீதும் அதன் நாட்டு மக்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட்டை CERT-In வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி இந்திய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 'இதை' மட்டும் செய்யாதீர்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

புதிய சைபர் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு

புதிய சைபர் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு

இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் புதிய சைபர் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீன இராணுவத்திடமிருந்து இந்தியா சைபர் தாக்குதலைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இணைய வீரர்கள் ஒரு பெரிய ஃபிஷிங் தாக்குதலை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இலவச கோவிட் -19 சோதனை என்ற பெயரில் ஆபத்து

இலவச கோவிட் -19 சோதனை என்ற பெயரில் ஆபத்து

இந்த சைபர் தாக்குதல் இலவச கோவிட் -19 சோதனை என்ற பெயரிலும் மக்களை தாக்கக்கூடும் என்ற செய்து வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காலகட்டத்தில் கோவிட் -19 சோதனையை ஒரு வாய்ப்பாக மாறுவேடமிட்டு சீனா தனது சைபர் தாக்குதலுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சைபர் தாக்குதல் ஃபிஷிங் தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!

இந்தியர்கள் மீது ஃபிஷிங் தாக்குதல்

இந்தியர்கள் மீது ஃபிஷிங் தாக்குதல்

உங்களின் மின்னஞ்சல்கள், உங்களுக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் வழியாக இந்த ஃபிஷிங் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவர்களின் இந்த சைபர் தாக்குதல், தனிநபர்களின் தனிப்பட்ட அடையாள விபரங்கள் மற்றும் அவர்களின் நிதி தகவல்களைத் திருடக்கூடியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பாக இதை கவனிக்க மறவாதீர்கள்

குறிப்பாக இதை கவனிக்க மறவாதீர்கள்

அரசாங்க அமைப்பைப் பிரதிபலிக்கும் வலைத்தள ஐடியைப் (ID) பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்படும் என்று செர்ட்-இன் எச்சரித்துள்ளது. குறிப்பாக "Ncov2019@gov.in" போன்ற ஐடிகளுக்கு எதிராகக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google அதிரடி அறிவிப்பு! 'இதை' எப்பவோ செஞ்சு இருக்கனும் ஆனா கொஞ்சம் லேட்!Google அதிரடி அறிவிப்பு! 'இதை' எப்பவோ செஞ்சு இருக்கனும் ஆனா கொஞ்சம் லேட்!

2 மில்லியன் போலியான மின்னஞ்சல்

2 மில்லியன் போலியான மின்னஞ்சல்

ஃபிஷிங் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் அல்லது செய்தியின் தலைப்பு இதுபோன்று இருக்கக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். இந்த தாக்குதலை நடத்துபவர்களிடம் சுமார் 2 மில்லியன் போலியான மின்னஞ்சல்-ஐடிகள் இருக்கிறது என்ற அதிர்ச்சி செய்தியையும் CRET எச்சரித்துள்ளது. இவர்களின் இந்த போலி ஐடிகள் தாக்குதலை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மட்டும் செய்யாதீர்கள்

இதை மட்டும் செய்யாதீர்கள்

உங்களுக்கு வரக்கூடிய செய்தி தலைப்பு "டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச கோவிட் -19 சோதனை" என்று இருக்கக்கூடும். உஷார் மக்களே!ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, கோரப்படாத மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளில் இணைப்புகளைத் திறக்க அல்லது கிளிக் செய்வதற்கு எதிராக தங்கள் ஊழியர்களை வழிநடத்துமாறு மத்திய பாதுகாப்புப் படைகள் கேட்டுக்கொண்டுள்ளது.

கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

ஒருவேளை அனுப்புநர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தாலும் கூட இணைப்புகளை ஓபன் செய்ய வேண்டாம் என்றும், பணிபுரியும் ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.அதேபோல், "அறிமுகமில்லாத அல்லது அறியப்படாத புதிய வலைத்தளங்கள் அல்லது இணைப்புகளில் தனிப்பட்ட நிதி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் பார்க்க ஆசையா.! நாசா செய்த ஏற்பாடு.! வைரல் வீடியோ.!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் பார்க்க ஆசையா.! நாசா செய்த ஏற்பாடு.! வைரல் வீடியோ.!

 உஷாராக இருங்கள்

உஷாராக இருங்கள்

கோவிட் -19 சோதனை உட்பட, உதவி, பரிசு, வெகுமதிகள், கேஷ்பேக் சலுகைகள் போன்ற சிறப்புச் சலுகைகளை வழங்கும் இணைப்புகள் என்ற பெயரிலும் இந்த ஆபத்து உங்களை அணுகக்கூடும் என்பதால் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Chinese Army could Conduct A Massive Cyber Attack Over India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X