ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்பைவேர் தாக்குதல் அதிகமாகிறதா? ஜாக்கிரதை மக்களே.!
ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் பெரும் கவலையே, ஆண்ட்ராய்டு போன்களில் வெகு சுலபமாக மால்வேர் மற்றும் வைரஸ்கள் தாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. சமீபத்திய தகவல் ஒன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் ஆப்ஸ்கள் மூலம் பயனர்களின் தரவுகள் ரகசியமாகச் சேகரித்து, திருடப்படுவது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமின்றி உலகளாவிய ஸ்மார்ட்போன் பயனர்களை கவலையாக்கி உள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் சீனாவை தளமாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் நிலைமை இன்னும் மோசமாகவுள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, சீனாவில் சிறந்த ஆண்ட்ராய்டு போன்களை வாங்குபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பயனர்களின் அனுமதியின்றி, அவர்களுக்கே தெரியாமல் நடக்கும் தரவு சேகரிப்பு மோசடி என்று கூறப்படுகிறது. அதேபோல், இவற்றை கண்டுகொள்ளாமல் விடும் பொழுது, பயனர்கள் காலப்போக்கில் கண்காணிக்கப்படுவதற் ஸ்பைவேர் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறதாம். பயர்களின் அடையாளங்களை எளிதில் வெளிப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
Xiaomi, OnePlus, Realme மற்றும் OPPO போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் முன்பே நிறுவப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள் மூலம் தங்கள் பயனர்களைப் பற்றிய பல முக்கியமான தகவல்களை சேகரிக்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. இந்த தகவல்கள் சாதனங்கள் விற்பனையாளருக்கு மட்டுமல்ல, Baidu போன்ற சேவை வழங்குநர்களுக்கும் சீன மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை (PII) சாதனங்கள் அனுப்புகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீன ஸ்மார்ட்போன் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆண்ட்ராய்டு சந்தையில் பயனர் தரவின் தனியுரிமையைப் பற்றிய ஒரு சிக்கலான படத்தை இந்த கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தொழில்நுட்ப நிறுவனங்களை நம்புவதற்கு உதவ, கடுமையான தனியுரிமைக் கட்டுப்பாடுகள் உடனடியாகத் தேவை என்றும், அவற்றில் பல பகுதி அரசாங்கத்திற்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் சீன உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கிய பல சாதனங்களை சோதித்துப் பார்த்தனர் மற்றும் அவற்றில் முக்கியமான தரவு கசிந்துள்ளது என்பதைக் கண்டறிய நெட்வொர்க் பரிசோதனையையும் மேற்கொண்டனர். பயனர் தரவை தெரியாமல் அனுப்ப இருக்கும் வழிகளை நிறுத்திவிட்டு, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களையும் ஆப் செய்துவிட்டு, மூன்றாம் தரப்பு சேவைகளையும் பயன்படுத்தாமல் நிறுத்திவைத்து சோதனை செய்தனர்.
ஆய்வின்படி, சேகரிக்கப்பட்ட PII ஆனது காண்டாக்ட், மொபைல் எண்கள், டெக்ஸ்ட் மெட்டாடேட்டா, ஜியோலொகேஷன் தரவு, IMEI மற்றும் MAC முகவரிகள், விளம்பர ஐடிகள் மற்றும் மொபைல் தொடர்பான அடிப்படை பயனர் தகவல் போன்ற முக்கியமான தகவல்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications