Home
News

DeepSeek AI-க்கு தடை விதித்த 2 நாடுகள்.. யூஸர் டேட்டா, IP அட்ரெஸ் பத்திரம்.. யூசர்களுக்கு எச்சரிக்கை!

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே, சீனாவை சேர்த்த டீப்சீக் ஏஐ ஆப் (DeepSeek AI App) ஆனது 2 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் ஆப்பை முதலில் தடை செய்த நாடுகள் - இத்தாலி மற்றும் அயர்லாந்து ஆகும். இனி இத்தாலி மற்றும் அயர்லாந்தில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய முடியாது.

அரசியல் ரீதியிலான சில முக்கிய கேள்விகளுக்கு டீப்சீக் பதிலளிக்க மறுக்கிறது என்கிற உண்மை அம்பலமான வேகத்தில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது. தற்போது டீப்சீக் ஆப்பை, ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தேடும் இத்தாலிய கஸ்டமர்களுக்கு "நீங்கள் இருக்கும் நாடு அல்லது பகுதியில் தற்போது இந்த ஆப் கிடைக்கவில்லை" என்கிற அறிவிப்பு கிடைக்கிறது. இதேபோல கூகுள் ஸ்டோரில் "இதற்கான ஆதரவு இல்லை" என்கிற மேசேஜ் கிடைக்கிறது.

DeepSeek AI-க்கு தடை விதித்த 2 நாடுகள்!

ஓவர் நைட்டில் உலக அளவில் பேமஸ் ஆன டீப்சீக் ஏஐ ஆப் ஆனது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகிய இரண்டிலுமே டவுன்லோட் செய்வதில் சாட்ஜிபிடி-ஐ விஞ்சினாலும் கூட, இந்த சீன ஆப்பின் தரவு சேகரிப்பு கொள்கைகளில் (Data harvesting policies) எந்த மாற்றமும் இல்லை.

அதாவது டீப்சீக் ஆனது ஏற்கனவே உள்ள பல சீன ஆப்களை போலவே பயனர்கள் தொடர்பான தரவை சேகரிப்பதாகவும், இப்போதைக்கு டீப்சீக் ஏஐ ஆப் ஆனது பயனர்களின் சாட்களுடன் சேர்த்து ஐபி முகவரியையும் சேகரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாகவே இந்த ஆப்பால் சீனாவிற்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை!

இத்தாலி நாட்டின் கட்டுப்பாட்டாளர்கள், டீப்சீக் ஏஐ ஆப் ஆனது பயனர் தரவை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து நிறுவனத்திடம் இருந்து பதில்களை கோரியுள்ளனர். ஜிடிபிஆர் விதிகள் [ஐரோப்பிய யூனியன் தரவு பாதுகாப்பு விதிமுறைகள்] மதிக்கப்படுகிறதா என்பதை பார்க்க எங்கள் அலுவலகம் ஒரு ஆழமான விசாரணையைத் தொடங்கும் என்று இத்தாலிய தரவுக் கட்டுப்பாட்டாளரின் தலைவர் பாஸ்குவேல் ஸ்டான்சியோன் கூறியுள்ளார்.

டப்ளினில் உள்ள ஐரிஷ் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர், அயர்லாந்தில் உள்ள டேட்டா சப்ஜஜெக்ட்ஸ் தொடர்பாக நடத்தப்படும் டேட்டா ப்ராசஸிங் குறித்த தகவல்களை கோரி டீப்சீக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக என்று தி கார்டியன் அறிக்கை வெளியிட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பது குறித்த விஷயத்தை பொறுத்தவரை, டீப்சீக் ஏஐ ஆனது தியனன்மென் சதுக்க படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பான பிராந்திய மோதல்களை பற்றியும் விவாதிக்க மறுக்கிறது. இதுகுறித்த கேள்விகளுக்கு சரியான பதில்களை அளிப்பதற்கு பதிலாக, பயனர்களிடம் மன்னிப்பு கேட்கிறது.

தியனன்மென் சதுக்க படுகொலை பற்றிய கேள்விக்கு, என்னை மன்னிக்கவும், இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் உதவிகரமான மற்றும் பாதிப்பில்லாத பதில்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஏஐ அசிஸ்டன்ட்" என்று டீப்சீக் பதில் அளித்துள்ளது. வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சியின் மீதான அதிகாரம் குறித்த கேள்விக்கு "மன்னிக்கவும், அது எனது தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேற ஏதாவது பேசலாம்." என்று கேட்டுள்ளது.

ஆனால் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி ஆனது அருணாச்சல பிரதேசத்தை பற்றிய கேள்விகளுக்கு அருணாச்சலப் பிரதேசம் ஆனது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பழங்குடியினரின் தாயகம், வளமான பல்லுயிர் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை கொண்ட பகுதி என்று விவரிக்கிறது.

சில ஆய்வாளர்கள், டீப்சீக்கின் ஏஐ ஆனது ஒரு ட்ரோஜன் ஹார்ஸாக (Trojan horse) செயல்படலாம் என்றும், புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகளில் (Geopolitical issues) சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை முன்வைக்கும் போது பயனர் தரவை (User Data) நுட்பமாக சேகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து தும் இருந்ததும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chinese AI App DeepSeek Blocked in Italy Ireland Due to User Data Privacy Problems
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X