சீனாவின் புதிய மிதக்கும் ரயில்! 370கிமீ வேகத்தில் செல்லும்.!

|

சீன இரயில்வே ரோலிங் ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக ரயிலின் சமீபத்திய முன்மாதிரியால் ரயில்வே துறையின் புதிய சகாப்தம் தொடங்கவுள்ளது. இந்த புதிய இரயில் காந்தசக்தி மூலம் மிதப்பதை பயன்படுத்தி மணிக்கு 370கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 மிதப்பதற்கு காந்தசக்தியை பயன்படுத்துகிறது

மிதப்பதற்கு காந்தசக்தியை பயன்படுத்துகிறது

இந்த அதிவேக புதிய ரயில் தற்போது அரசுக்கு சொந்தமான சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ரயில் வழக்கமான ரயில்களை போன்று தண்டவாளங்களில் இயங்காமல் தண்டவாளங்களுக்கு மேலே மிதப்பதற்கு காந்தசக்தியை பயன்படுத்துகிறது.

விமானத்தில் பறப்பதற்கு மாறாக...

விமானத்தில் பறப்பதற்கு மாறாக...

ரயிலின் அற்புதமான வேகத்திற்கு நன்றி கூறும் அதே
வேளையில், இலக்குகளுக்கு இடையில் விமானத்தில் பறப்பதற்கு மாறாக, சில பயணங்கள் இந்த ரயிலால் விரைவாக முடிக்கப்படலாம்.

 டிங் சன்சான் கூறுகையில்...

டிங் சன்சான் கூறுகையில்...

உதாரணமாக, இந்த புதிய ரயிலை உருவாக்கும் குழுவின் தலைவரான டிங் சன்சான் கூறுகையில், இந்த மேக்லெவ் ரயிலில் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கான பயணம் சுமார் மூன்றரை மணி நேரத்தில் முடிவடையும் என்று கூறுகிறார். இது விமானத்தில் பறக்க எடுக்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் குறைவானதாகும்.

17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?

2021 ஆம் ஆண்டில்..

2021 ஆம் ஆண்டில்..

2021 ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை வழங்க தயாராக இருக்கும் என்று சிலர் கூறிக்கொண்டாலும், மேக்லெவ் ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு முன்பாக பல வருடங்கள் சோதனை செய்யவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் வெறி: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!டிக்டாக் வெறி: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!

மேக்லெவ் ரயில் தொழில்நுட்பம்

மேக்லெவ் ரயில் தொழில்நுட்பம்

ரயில்வே கெஜட் இன்டர்நேஷனலின் (லண்டனை தலைமையிடமாக கொண்டது) தலைமை செய்தி ஆசிரியர் கிறிஸ் ஜாக்சன் கூறுகையில், ‘சீனாவின் மேக்லெவ் தற்போதையை நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ள ஆராய்ச்சி திட்டமாகும். வர்த்தக ரீதியான வழியை உருவாக்க எந்த நிறுவனத்திடமும் உறுதியாக திட்டங்கள் எதுவும் இல்லை' என்கிறார். மேக்லெவ் ரயில் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து வருகிறது. உந்துவிசை வழங்கும் போது தண்டவாளத்திற்கு மேலே ரயிலை உயர்த்துவதற்கு வலுவான மின்காந்தங்களைப் பயன்படுத்துகிறது. மேலும் இதனால் உராய்வும் தடுக்கப்படுகிறது.

இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!

நல்ல வரவேற்பைப் பெறும்

நல்ல வரவேற்பைப் பெறும்

காந்த சக்தியை பயன்படுத்தி தண்டவாளத்திற்கு மேலே மிதப்பதால் ரயில்கள் வேகமாக செல்லும் என்பதை தவிர, அவை குறைந்த அதிர்வு மற்றும் சத்தத்தை உருவாக்குவதால் மேலும் சாத்தியமாகின்றன. இது ரயில் வழித்தடங்களுக்கு அருகில் வசிப்பவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் மற்றும் ரயில்கள் பயணிக்கும் போது வெளிப்படுத்தும் சத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். காந்தசக்தி மூலம் மிதத்தலை பயன்படுத்தும் ரயில்கள் குறைவான உதிரிபாகங்களை கொண்டிருக்கின்றன மற்றும் இதனால் மேம்பட்ட நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
chinas-new-magnetic-levitation-train-will-float-on-tracks-to-hit-speeds-of-370mph : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X