அம்பலமானது : அமெரிக்கவிற்கு எதிரான சீனாவின் சதி திட்டம்..!

|

சிரியா மீது நடத்திய தாக்குதலில் இருந்து தான் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா மிகவும் அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டன.

இப்போது சீனாவும் அந்த பட்டியலில் இணைந்து கொள்ள நினைக்கும்படியான தகவல் ஒன்று அம்பல்மாகியுள்ளது.

செய்தி :

செய்தி :

கிழக்கு சீன பகுதியில் அடையாளம் தெரியாத, செயற்கைகோள்களுக்கு எதிரான (Anti-Satellite) அதிநவீன ஆயுதம் ஒன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ள செய்தி உறுதியாகி உள்ளது.

அமெரிக்கா :

அமெரிக்கா :

செயற்கைகோள்களை அழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சீனாவின் இந்த பரிசோதனை அமெரிக்க செயற்கைகோள்களை குறி வைத்தே நடத்தப்பட்டுள்ளது என்பதும் அம்பலாமாகி உள்ளது.

தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் :

தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் :

இந்த தகவலை அமெரிக்க ஊடகமான தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் (The Washington Free Beacon) தெரிவித்துள்ளது.

டாங் நெங்-3 :

டாங் நெங்-3 :

சீனா நடத்திய இந்த விபரீதமான பரிசோதனையின் பெயர் டாங் நெங்-3 மிசைல் (Dong Neng-3 missile) என்று கூறப்படுவதாகவும் தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் தெரிவித்துள்ளது.

உறுதி :

உறுதி :

மேலும் இந்த சோதனை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி நடத்தப்பட்ட போதிலும் தற்போது தான் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை நிலையம் :

பரிசோதனை நிலையம் :

கிழக்கு சீன பகுதியில் உள்ள, சீனாவின் ஏவுகணை பரிசோதனை நிலையமான கொர்லா மிசைல் டெஸ்ட் காம்ப்ளெக்ஸ் (Korla Missile Test Complex) நிலையத்தில் இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தகவல் :

தகவல் :

இதை தவிர்த்து சீனாவின் இந்த பரிசோதனை குறித்து அனைத்து வகையான தகவல்களும் மறைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை :

பரிசோதனை :

மேலும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் இந்த பரிசோதனை வெற்றி அடைந்தததா அல்லது தோல்வியை தழுவியதா என்பதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மிங் போ :

மிங் போ :

மேலும் ஹாங்காங்கை சேர்ந்த ஊடக நிறுவனமான மிங் போ (Ming Pao) தகவலின்படி இறுதிகட்ட இடைமறிப்பு ஏவுகணை சோதனை வளிமண்டலத்தில் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

சீனா மறைக்கிறது :

சீனா மறைக்கிறது :

தோல்வியோ வெற்றியோ எது நடந்தாலும், இது போன்ற செயற்கைகோள்களுக்கு எதிரான ஏவுகணை சார்ந்த பல விடயங்களை சீனா மூடி மறைக்கிறது என்பது தான் நிதர்சனம்.

மொத்தம் :

மொத்தம் :

மேலும் 2005-ஆம் ஆண்டில் இருந்து இது வரை மொத்தம் 8 முறை ஆன்ட்டி-சாட்டிலைட் ஏவுகணை (anti-satellite missile) பரிசோதனையாயை சீனா நிகழ்த்தியுள்ளது.

ஏவுகணை இடைமறிப்பு :

ஏவுகணை இடைமறிப்பு :

அவைகளில் 2010, 2013, மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் நிலம் சார்ந்த ஏவுகணை இடைமறிப்பு (land-based missile interception) சோதனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை :

பரிசோதனை :

2007-ஆம் ஆண்டு தான் சீனா இது போன்ற செயற்கைகோள்களுக்கு எதிரான ஆயுதங்களை தயாரித்து, பரிசோதனை செய்து வரும் விடயம் முதல் முதலில் அம்பலாமானது.

ரகசியங்கள் :

ரகசியங்கள் :

செயலிழந்த வானிலை செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தத்தின் மூலம் தான் சீனாவின் ரகசியங்கள் மெல்ல மெல்ல வெளியாக தொடங்கின.

30,000 கிலோ மீட்டர்  :

30,000 கிலோ மீட்டர் :

2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றில் சீனா அனுப்பிய ஏவுகணை பூமியில் இருந்து சுமார் 30,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>சக்தி வாய்ந்த ரஷ்யா, ஒற்று கொண்டது அமெரிக்கா..!</strong>சக்தி வாய்ந்த ரஷ்யா, ஒற்று கொண்டது அமெரிக்கா..!

<strong>பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!</strong>பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!

<strong>கூகுள் மேப்ஸ் : மறைக்கப்படும் 'ரகசிய பகுதிகள்'..!</strong>கூகுள் மேப்ஸ் : மறைக்கப்படும் 'ரகசிய பகுதிகள்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படம் : கூகுள்

Best Mobiles in India

English summary
China Tests Secret Missile Capable of Hitting US Satellites. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X