Just In
- 5 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 9 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 9 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 11 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
இரட்டை இலையை முடக்கிடலாம் என எண்ணுகிறார்கள்..பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்க.. ராஜன் செல்லப்பா
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Movies
தனுஷ்50 படத்திற்காக தயாராகும் படக்குழு.. பிரம்மாண்டமாக போடப்படும் ராயபுரம் செட்!
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பிய சீனா.!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தொடர்ந்து பல்வேறு நாடுகள் முயற்சி செய்துவருகின்றன, அதன்படி இன்று சீனா செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய கேரியர் ராக்கெட் லாங் மார்ச் 5 மூலம் மதியம் 12:41 மணிக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின்படி செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கும் லேண்டர் மற்றும் அங்கு பயணித்து ஆராய்ச்சி செய்யும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய டினாவென் -1 என்ற சீன விண்கலம் லாங்மார்ச் 5 ராக்கெட் மூலம்ஏவப்பட்டது.

இந்த புதிய விண்கலம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு 90நாட்களுக்கு கிரகத்தைஆராய ஒரு ரோவரை இறக்க ஆய்வு நடத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனிலிருந்து சரியாக நான்காவு கோளாக இந்த செவ்வாய் கிரகம் உள்ளது, சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக
2-வது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது. மேலும் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள இடைவெளி 54.6மில்லியன் கிமீ என்று
கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த திங்கள் கிழமை ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை சுமார் ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர். மேலும் கொலராடோபல்கலைக் கழகத்தில் இருக்கும் விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்பு அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் அமீரகத்திற்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார், கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும் என்றும், தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படிஎன்பது குறித்த அமீரகத்தின் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

ஐக்கிய அரபு அமீரகம் ஹோப் விண்கலம் அதன் அமைப்புகளுக்கு சக்தி அளிக்க சோலார் பேனல்களை செயல்படுத்தியது மற்றும் பூமியில் உள்ள தளத்தில் ரேடியோ வழி தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சுருக்கமாக தினசரி மற்றும் பருவகால மாற்றங்களை தெரிந்துகொள்ளவும், முதன்முறையாக செவ்வாய் வளிமண்டலத்தின் முழுமையான படத்தை வழங்குவதையும் இந்த ஆய்வுக்கான விண்கலம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470