தனி விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்: மூன்று வீரர்களை அனுப்பியது சீனா.!

|

ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை நிர்ணயித்துள்ளன. இதேபோன்று விண்வெளியில் ஒரு தரமான ஆய்வு நிலையத்தை அமைக்கு முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

ண்டும் என்றால், சர்வதேச

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா தனியாக தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. மேலும் இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ' பெட்டகம் கடந்த ஏப்ரல் 26-ல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 சரக்கு விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் விண்வெளி

அதன்பின்பு விண்வெளி நிலையத்தற்கு தேவைப்படும் எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி ஆடைகள், உணவு பொருள்களுடன் தியான்சோ 2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

விண்வெளி நிலையம்

அதனை தொடர்நது விண்வெளி நிலையம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் அந்த 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி: எப்படி தெரியுமா?ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி: எப்படி தெரியுமா?

யாக 10 நமிடங்களில் புவி

ராக்கெட் புறப்பட்ட சரியாக 10 நமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. குறிப்பாக அந்த விண்கலம் விரைவில் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும் எனத் தகவல்
வெளிவந்துள்ளது.

மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..

 5 ஆண்டுகளுக்கு பின்பு சீனா

அதேபோல் 5 ஆண்டுகளுக்கு பின்பு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. மேலும் இந்த மூன்று வீரர்கள் சில மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட ஸ்பெஸ் சூட் எனப்படும் உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறிபல மணி நேரங்கள் விண்வெளயில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..

டுமான பணிகளை

குறிப்பாக இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக அந்த மூன்று வீரர்களுக்கும் தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அனுப்பியதை போலவே, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்ப சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின்பு 70 டன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
China sends three soldiers to build new space station: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X