NASA-வையே நக்கல் அடிக்கும் சீனா! அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுச்சா?

|

சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும் போதும், அது வளர்ச்சிகளில் கவனம் செலுத்துவதை விட, அமெரிக்காவை எப்படியெல்லாம் வெறுப்பேற்றலாம்? நாம் என்ன செய்தால் அமெரிக்கா கடுப்பாகும்? என்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது போல் தெரிகிறது!

சமீபத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (NASA) நாசாவின் "நிலவு திட்டத்தை" அப்பட்டமாக காப்பி அடித்த சீனா, கூச்சமே இல்லாமல் அதை பத்திரிகை வழியாக, ஒரு கட்டுரையாகவும் வெளியிட்டு இருந்தது!

அதனை தொடர்ந்து.. தற்போது!

அதனை தொடர்ந்து.. தற்போது!

நாசாவின் கனவு திட்டங்களில் ஒன்றான ஆர்ட்டெமிஸ் 1 (Artemis 1) தொடர்பான ஒரு கடுமையான விமர்சனத்தை, சீனா முன் வைத்துள்ளது.

அதென்ன விமர்சனம்? ஆர்ட்டெமிஸ் 1 என்றால் என்ன? அது ஏன் நாசாவின் கனவு திட்டமாகும்? சீனாவின் விமர்சனத்திற்கு நாசாவின் பதிலடி என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

எங்களுடையது தான் பவர்ஃபுல்!

எங்களுடையது தான் பவர்ஃபுல்!

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் (SCMP) கூற்றுப்படி, கடந்த செப்டம்பர் 6 அன்று, சீனாவின் புதிய ராக்கெட் எஞ்சின்கள் ஆனது சீனாவின் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனால் (CASC சோதனை செய்யப்பட்டுள்ளது!

அந்த சோதனைக்கு பின்னர், சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், சீனாவை நிலவுக்கு கொண்டு செல்வதற்கான அதன் புதிய ராக்கெட் என்ஜின்கள் ஆனது ஆர்ட்டெமிஸ் 1-இல் பயன்படுத்தப்படும் என்ஜின்களை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளனர்.

நாங்க 25 டன்.. நீங்க வெறும் 12 டன்!

நாங்க 25 டன்.. நீங்க வெறும் 12 டன்!

சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், அவர்களின் புதிய க்ளோஸ்டு எக்ஸ்பாண்டர் சைக்கிள் ராக்கெட் எஞ்ஜின்கள் (Closed expander cycle rocket engines) ஆனது 25 டன் அதிகபட்ச உந்துதலை உருவாக்கும் திறன் கொண்டவை என்று கூறுகின்றனர்,

இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆர்எல்-10 எஞ்சின்களால் உற்பத்தி செய்யப்படும் அளவை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

நிலவுக்கு செல்லும் சீன விண்வெளி வீரர்கள்!

நிலவுக்கு செல்லும் சீன விண்வெளி வீரர்கள்!

இந்த எஞ்சின்கள் ஆனது, தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ஹெவி-லிஃப்ட் லாங் மார்ச் 9 ராக்கெட்டின் (Heavy-lift Long March 9 rocket) அப்பர் ஸ்டேஜில் பயன்படுத்தப்படும் என்றும் சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அறியாதோர்களுக்கு, மார்ச் 9 ஆனது நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனாவின் மூன் மிஷன்களில் ஒன்றாகும்!

இதுபோல நான்கு எஞ்சின்கள் இருந்தால் தான்..?

இதுபோல நான்கு எஞ்சின்கள் இருந்தால் தான்..?

பெய்ஜிங் ஏரோஸ்பேஸ் ப்ராபல்ஷன் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள எஞ்சின் ப்ராஜெக்ட்டின் முதன்மை விஞ்ஞானி ஆன சூ பாக்சின், புதிய 3டி-பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டதாகவும், சீன விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அழைத்து செல்ல இதுபோன்ற நான்கு எஞ்சின்கள் தேவைப்படும் என்றும் கூறி உள்ளார்!

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

சீன-ரஷ்ய கூட்டணி!

சீன-ரஷ்ய கூட்டணி!

சீனா தனது நிலவு பயணத்திற்காக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியின் கீழ், வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள், சீனா தனது விண்வெளி வீரர்களை சந்திர மேற்பரப்பில் தரையிறக்குவதை இலக்காக கொண்டுள்ளது.

சீனா Vs நாசா!

சீனா Vs நாசா!

மறுகையில் உள்ள நாசா அதன் ஆர்ட்டெமிஸ் மிஷனின் கீழ் - சீனாவிற்கு முன்னதாகவே - அதாவது 2025 ஆம் ஆண்டளவில் நிலவில் தன் விண்வெளி வீரர்களை தரை இறக்க திட்டமிட்டுள்ளது.

இதனாலேயே ஆர்ட்டெமிஸ் மிஷன் ஆனது நாசாவின் முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது, மேலும் இது பல ஆண்டுகளுக்கு பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பும் நாசாவின் கனவு திட்டமும் கூட!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

வெறுப்பேற்றுவது போக.. சீனா காப்பியும் அடிக்கிறது!

வெறுப்பேற்றுவது போக.. சீனா காப்பியும் அடிக்கிறது!

சீனா தனது நிலவு பயணத்திற்காக, மொத்தம் 10 சாத்தியமான தரையிறங்கும் இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த பத்து இடங்களில் நாசா ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள 3 தளங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் சீன பத்திரிக்கை ஒன்றின் வழியாக கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த நாசா, சீனா தன் சந்திரப் பயணம் குறித்து "வெளிப்படையாக" இருக்க வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளது.

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
China Says NASA Artemis 1 Rocket Engines Are Weaker Than Our New Engines

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X