அமெரிக்க இராணுவத்தை திணறடிக்கும் சீனா.. ஒரே ஒரு சாட்டிலைட் தான் 'எல்லாமே' தெளிவா தெருஞ்சுடுச்சு..

|

சீனாவால் அமெரிக்க இராணுவத்திற்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. சீனா சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பிய ஒரு சிறிய செயற்கைக்கோள் மூலம் இந்த தலைவலி உருவாகியுள்ளது. காரணம், இந்த சிறிய செயற்கைக்கோள் அமெரிக்க நகரங்களின் அனைத்து இடங்களையும் 'கிறிஸ்டல் கிளியர்' படங்களாகக் கைப்பற்றக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்குப் பயணங்களை அனுப்புவதைத் தாண்டி, சீனா மீண்டும் பரபரப்பான தலைப்புச் செய்தியை இப்போது மீண்டும் உருவாக்கியுள்ளது.

முழு அமெரிக்க நகரத்தையும் தெளிவாகப் படம்பிடிக்கும் சீனாவின் செயற்கைக்கோள்

முழு அமெரிக்க நகரத்தையும் தெளிவாகப் படம்பிடிக்கும் சீனாவின் செயற்கைக்கோள்

விண்வெளியில் இருந்து அமெரிக்க நகரங்களின் அனைத்து இடங்களையும் உயர் தெளிவுத்திறன் உடன் புகைப்படங்கள் எடுக்கக்கூடிய ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாகச் சீனா வெளிப்படையாகக் கூறியுள்ளது. வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த சீன செயற்கைக்கோள் வெறும் 42 வினாடிகளில் முழு அமெரிக்க நகரத்தையும், அதன் பகுதியில் இருக்கும் அனைத்து தகவலையும் புகைப்படங்களாகக் கைப்பற்றுகிறது. இந்த தெருக்களில் இராணுவ வாகனத்தை உணர்ந்து அவற்றில் என்ன வகை ஆயுதம் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற போதுமான தகவலையும் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவம் திணறுவதற்கு உண்மை காரணம் என்ன?

அமெரிக்க இராணுவம் திணறுவதற்கு உண்மை காரணம் என்ன?

இதனால் தான் அமெரிக்க ராணுவம் இப்போது பெரிய சிக்கலில் இருப்பதாகத் திணறியுள்ளது. இந்த பெய்ஜிங்-3 என்ற செயற்கைக்கோள், கடந்த ஜூன் மாதம் சீனாவால் ஏவப்பட்ட ஒரு டன் வர்த்தக செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இது சான் பிரான்சிஸ்கோ விரி குடாவின் மையப் பகுதியில் (3,800 சதுர கிலோமீட்டர்) ஆழமான ஆய்வை முடித்துவிட்டது என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனா இதுவரை பல்வேறு நோக்கங்களுக்காகப் பல புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

இதற்கு முன் சீனா அனுப்பிய அதிநவீன செயற்கைக்கோள் என்ன ஆனது?

இதற்கு முன் சீனா அனுப்பிய அதிநவீன செயற்கைக்கோள் என்ன ஆனது?

முன்னதாக, டிசம்பர் 26 அன்று, சீனா ஒரு புதிய செயற்கைக்கோளை ஒரு கேமராவுடன் ஏவியது. இது தரையின் ஐந்து மீட்டர் தெளிவுத்திறன் புகைப்படங்களை எடுக்கக் கூடியது என்று சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) கூறியிருந்தது. Ziyuan-1 02E அல்லது "பைவ் மீட்டர் ஆப்டிகல் சாட்டிலைட் 02" என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள டையுவான் (Taiyuan) செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து நீண்ட மார்ச்-4C ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன செயற்கைக்கோள்

பெய்ஜிங்-3 இன் திட்டத் தலைவர் ஸ்பேஸ்கிராப்ட் இன்ஜினியரிங் இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், யாங் ஃபாங் மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது, "சீனா சுறுசுறுப்பான செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் தாமதமாகத் தொடங்கியது. ஆனால், குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னேற்றங்களைச் சாதித்துள்ளது. குறுகிய கால அளவில் எங்கள் தொழில்நுட்பம் உலகின் முன்னணி நிலைக்கு முன்னேறியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..

இந்த செயற்கைக்கோள் எவ்வாறு இயங்குகிறது?

இந்த செயற்கைக்கோள் எவ்வாறு இயங்குகிறது?

செயற்கைக்கோள் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் அதிர்வுகளைத் தூண்டும் என்பதால் புகைப்படங்களை மங்கலாக்கும், விண்வெளியில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுப்பது மிகவும் சவாலான பணியாகும். இந்த தொழில்நுட்பக் கட்டுப்பாட்டின் காரணமாக, பெரும்பாலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் படங்களைப் பிடிக்கும்போது நிலையானதாக இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதை பெய்ஜிங்-3 சிறப்பாகச் செய்து மிகத் தெளிவான புகைப்படங்களைப் பதிவு செய்கிறது.

இதுவரை பூமியில் உருவாக்கப்படாத தனித்துவமான செயற்கைக்கோளா இது?

இதுவரை பூமியில் உருவாக்கப்படாத தனித்துவமான செயற்கைக்கோளா இது?

யாங்கின் கூற்றுப்படி, பெய்ஜிங்-3 இதுவரை பூமியில் உருவாக்கப்படாத மிகத் தனித்துவமான சிறந்த சாட்டிலைட் வகை என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்-3 மிகவும் வேகமான செயற்கைக்கோள் மற்றும் அதன் சிறிய அளவு மற்றும் குறைந்த விலை காரணமாக, இதுவரை உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இது மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பெய்ஜிங்-3 இன் நிகரற்ற வேகமானது, திபெத்திய பீடபூமிக்கும் கிழக்கு சீனக் கடலுக்கும் இடையில் உள்ள 6,300 கிலோமீட்டர் நீளமுள்ள யாங்சே நதியின் படங்களை,

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா விஞ்ஞானி கூறிய 'உண்மை' தகவல் என்ன தெரியுமா?செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா விஞ்ஞானி கூறிய 'உண்மை' தகவல் என்ன தெரியுமா?

சவாலான காரியங்களை எளிமையாகச் செய்து முடிக்கும் பெய்ஜிங்-3

சவாலான காரியங்களை எளிமையாகச் செய்து முடிக்கும் பெய்ஜிங்-3

வடக்கிலிருந்து ஒரே ஒரு பயணத்தில் படம் எடுப்பது போன்ற சவால்கள் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று முன்னர் கருதப்பட்ட சில கண்காணிப்பு பணிகளை, இப்போது பெய்ஜிங்-3 மிக எளிமையாக முடிக்க அனுமதிக்கிறது. செயற்கைக்கோள் அதன் விமானப் பயணத்தைச் சுயாதீனமாக வடிவமைக்க முடியும், செயற்கைகோளில் உள்ள செயற்கை நுண்ணறிவு உபகரணங்களின்படி, ஒவ்வொரு நாளும் இது சுமார் 100 மறுபரிசீலனைகள் மூலம் உலகம் முழுவதும் ஆர்வமுள்ள 500 பகுதிகளைக் கண்காணிக்கும் என்று சீனா கூறியுள்ளது.

தெளிவான புகைப்படம் எடுப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சீனா

தெளிவான புகைப்படம் எடுப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சீனா

கடந்த காலத்தில் சீனா களமிறங்கியதை விட, இது இந்த வேகமான செயற்கைக்கோளை மிகவும் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் ஆக்குகிறது. செயற்கைக்கோள் சாதனை வேகத்தில் சுழன்று சாய்ந்து கொண்டிருந்தாலும், அதிர்வைக் குறைக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகச் சீனக் குழு கூறியது. பெய்ஜிங்-3 செயற்கைக்கோள் CAST3000E இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டது. இது புதிய தலைமுறை சீன கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. இவை அளவில் சிறியவையாக இருக்கிறது ஆனால், எதிர்பார்ப்பதை விட அதிக சக்திவாய்ந்தவையாகச் செயல்படுகிறது.

பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..

AI கட்டுப்பாட்டுடன் இன்னும் ஏராளமான புதிய தொழில்நுட்பம்

AI கட்டுப்பாட்டுடன் இன்னும் ஏராளமான புதிய தொழில்நுட்பம்

புதிய மேடையில் உள்ள சோலார் பேனல்கள் செயற்கைக்கோள் வேகமாகவும் கூர்மையாகவும் சுழலும்போது அவை அசையாமல் இருக்க ஒரு சிறப்புக் கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. திடீரென்று ஒளியில் வெளிப்படும் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள மேம்பட்ட குளிரூட்டும் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. விரைவான இயக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்பிலிருந்து செயற்கைக்கோளைப் பாதுகாக்க, தொலைநோக்கிகள் மற்றும் ஆண்டெனாக்கள் போன்ற முக்கியமான கூறுகள் AI கட்டுப்பாடு போன்ற புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மிஞ்சிய சீனா

அமெரிக்காவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மிஞ்சிய சீனா

இந்த செயற்கைக்கோள் குறிப்பிட்ட இலக்குகளின் இருப்பைக் கண்டறிந்து, அவற்றின் தரைக்கட்டுப்பாட்டு புகைப்படங்களை வழங்குகிறது மற்றும் பெய்ஜிங்-3 இன் பதிலளிப்பு நேரம் வோர்ல்டு வியூ 4 (WorldView-4) ஐ விட 2-3 மடங்கு வேகமானது. இது இன்றுவரை மிகவும் மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகக் கருதப்படுகிறது. இது அமெரிக்கா தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..

மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனாவின் நடவடிக்கை

மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனாவின் நடவடிக்கை

இது சீனாவுடனான நவீனக் கால பனிப்போரில் பூட்டப்பட்டிருக்கும் வாஷிங்டனில் எச்சரிக்கை மணிகளை அனுப்பக்கூடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியின் புகைப்படங்களைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு ஹைப்பர்சோனிக் சோதனை பணியைச் சீனா மேற்கொண்டது, இது மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Best Mobiles in India

English summary
China Says Its Tiny Beijing3 Satellite Can Capture Crystal Clear Images Of American Cities : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X