போலி ஆப்பிள் ஸ்டோர் : கவனமாக இருங்க மக்களே..!!
கருப்பு - வெள்ளை, நல்லது - கெட்டது, நன்மை - தீமை என்பது போல் உண்மை மற்றும் போலி என்ற வாக்கியம் தான் இந்த காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்க முடியும். இன்றைய இயந்திர உலகில் எல்லாவற்றிலும் போலி கலந்திருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே..
ஆப்பிள் மறைத்த ரகசியங்கள்..!!
அந்த வகையில் உலகளவில் சீனா என்றால் முதலில் நினைவுக்கு வருவது போலி சந்தைகள் தான். சீன சந்தையில் புதிதாக முளைத்திருக்கும் போலி தொழில்நுட்ப 'கடை' ஒன்று அமெரிக்கர்களை கடுப்பேற்றியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஷென்சென்
சீனாவின் ஷென்சென் நகரில் சுமார் முப்பதுக்கும் அதிகமான போலி ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன.

லோகோ
பளிச்சிடும் வெள்ளை நிற ஆப்பிள் லோகோக்களுடன் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகின்றது போலி ஆப்பிள் ஸ்டோர்கள்.

அசல்
பார்க்க அசல் ஆப்பிள் ஸ்டோர் போன்று உள் வடிவமைப்பில் இருந்து, விற்பனையாளர்களின் ஆடை வரை அனைத்திலும் உண்மையை பிரதிபலிக்கின்றது போலி ஆப்பிள் ஸ்டோர்கள்.

ஆப்பிள்
உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் ஷென்சென் நகரில் ஒரே ஒரு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஐந்து அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களை மட்டுமே வைத்திருக்கின்றது.

பிரான்டு
ஆப்பிள் பிரான்டு ப்ரியர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்து இருப்பதே போலி ஆப்பிள் ஸ்டோர்களின் வரவுக்கு முக்கிய காரணமாகும்.

ப்ரியர்கள்
சீனாவில் மற்றவர்களுக்கு முன் ஆப்பிள் ஐபோன்களை அதிக விலை கொடுத்து வாங்க பல ஆப்பிள் ப்ரியர்கள் இருப்பதாக போலி ஆப்பிள் ஸ்டோர் ஊழியரான ஷௌ தெரிவித்துள்ளார்.

தேவை
சீனாவில் முன்பதிவு செய்யப்பட்ட புதிய ஆப்பிள் கருவிகளுக்கு தேவை அதிகரித்திருப்பதோடு சீனாவில் இந்த கருவிகள் தாமதமாகவே கிடைக்கும் என்பதால் போலி சந்தையில் இந்த கருவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

முன்பதிவு
போலி சந்தையில் தேவை அதிகமாகியிருப்பதால் அங்கும் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு மிக விரைவில் இவை விற்பனை செய்யப்படும் என்றே கூறப்படுகின்றது.

கருத்து
சீனாவில் இயங்கும் போலி ஆப்பிள் ஸ்டோர்கள் குறித்து கருத்து தெரிவிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டாலும், தனது வாடிக்கையாளர்களை போலி கருவிகளை வாங்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications