கின்னஸ் விசித்திரம் : சீனாவின் அசாத்திய சாதனை!!
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல்வேறு நாடுகளும் பதக்கங்களைக் குவித்து வரும் நிலையில் உள்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு அசார்த்தியமாக கின்னஸ் உலக சாதனை ஒன்றைச் சீனா படைத்திருக்கின்றது. பல்வேறு விசித்திரங்களுக்குப் பெயர் போன சீனா கின்னஸ் சாதனையையும் விசித்திரமான ஒன்றாகவே படைத்திருக்கின்றது.

சீனாவின் ஷாங்டாங் நகரில் நடைபெற்ற கிங்டௌ பீர் திருவிழா ஜூலை மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது. இத்திருவிழாவில் அரங்கேற்றப்பட்ட நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த நடனமானது கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1007 சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோபோட்கள் ஒரே நேரத்தி் நடனமாடியது சீனாவிற்கு புதிய கின்னஸ் சாதனையை பெற்றுத் தந்திருக்கின்றது. ஒரே மாதிரி காட்சியளிக்கும் இந்த ரோபோட்கள் QRC-2 ZV என அழைக்கப்படுகின்றது.

43.8 செ.மீ உயரம் கொண்ட இந்த ரோபோக்கள் ஒற்றை மொபைல் போன் மூலம் இயக்கப்படுகின்றன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ரோபோ நடனம் சுமார் 60 நொடிகள் நீடித்தது. சில ரோபோக்கள் குறைந்த நேரத்திலேயே நடனமாடுவதை நிறுத்தி கீழே விழுந்ததால் அவை இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரோபோக்கள் மற்றும் இவற்றின் நடன யுத்திகளை எவர் விண் (Ever Win) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இத்தனை ரோபோக்களை இயக்கும் போது ரேடியோ அதிர்வெண் குறுக்கீடுகளை கட்டுப்படுத்துவது சிரமமானதாக இருந்தது என அந்நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
வீடியோ : Guinness World Records


Click it and Unblock the Notifications