நிலவின் தரைப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம்: சீன விண்கலத்தின் முக்கியத் தகவல்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,நிலவின் தரைப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சீனா விண்கலம் கணடறிந்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது கடந்த 2020-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. குறிப்பாகநிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது அந்த விண்கலம்.

குறிப்பாக அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய சாங்கே-5 விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. அதன்பின்னர் சுமார் 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்கலம் கொண்டுவந்த அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர் அந்த முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது.

சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளிவந்த தகவலின்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். குறிப்பாக இதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ' மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக ககன்யானின் நோக்கம் என்னவென்றால் மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்குக் திரும்ப கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும்.

குறிப்பாக ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளன.

அதேபோல் ககன்யான் திட்டத்தின்படி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு 2 முறை ஆளில்லா விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ககன்யான் திட்டத்தின்படி, முதல் ஆளில்லா விண்கலத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவிற்கு (ஆகஸ்ட் 15, 2022) முன்பு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும்முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications