சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!
பூமியில் உயிரனங்களின் வாழ்விற்கு ஆதாரமாக இருப்பது சூரியன் என்றே கூறலாம். புதுமைகளை ஆற்றுவதில் கோடிக்கணக்கில் செலவிட துடிக்கும் நாடு சீனா. முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளைவுகள் சிந்திக்காமல் முணைப்பு காட்டுவதில் இந்நாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு.

செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சி
இதன் ஒருபகுதியாக செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது சீனா. கடந்த 1999 ஆண்டு முதலே செயற்கை சூரியன் எனப்படும் டோக்கோமாக் பணியில் சீனா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது. சூரியனின் மையப்பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமாகிறது.

160 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை
சீனாவின் செயற்கை சூரியன் 160 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைக் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சீனா வடிவமைத்த பரிசோதனையில் செயற்கை சூரியனின் சூப்பர் கண்டக்டிங் டோகோமாக் (ஈஸ்ட்) இணைவு சூரியனின் மைய வெப்பநிலையைவிட எட்டு மடங்கு எரிகிறது.

ஹெஃபி இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசிகல் சயின்ஸ்
சீன அறிவியல் அகாடமியின் ஹெஃபி இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசிகல் சயின்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த செயற்கை சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் இயற்கையாக நிகழும் அணுக்கரு இணைவு முறையை செயற்கையாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். 101 வினாடிகளுக்கு 120 மில்லியன் டிகிரி செல்சியஸ் பிளாஸ்மா வெப்பநிலையையும் 160 மில்லியன் செல்சிஸை 20 வினாடிகளுக்கும் நீடித்து சாதனை படைத்துள்ளது.

செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள இணைவு
செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைவு எதிர்வினை குறித்து பார்கையில், இரண்டு ஒளி கருக்கள் ஒன்றிணைந்து ஒரு கனமான கருவை உருவாக்குகின்றன. செயற்கை சூரியனின் ஆற்றலான இந்த இணைவு எதிர்வினைகள் மூலம் உருவாகிறது. தூய்மையான ஆற்றல் மற்றும் அதிக வெப்பநிலையை உருவாக்குவதற்கு, ஹைட்ரோஜந் ஐசோடோப்புகள் இணைவு எதிர்வினைகளின் உள்ள பிளாஸ்மா நிலைகளை உருவாக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் பிரிக்கப்படுகின்றன. முன்னதாக சோதனையில் செயற்கை சூரியன் 100 மில்லியன் டிகிரி செல்ஸியை எட்டியதாக கூறப்படுகிறது.

எச்எல்-2எம் டோக்கோமேக் எனப்படும் அணுக்கரு
இதில் எச்எல்-2எம் டோக்கோமேக் எனப்படும் அணுக்கரு உலையை சீனா அமைத்தது. இந்த சோதனையான பல ஆண்டுகள் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு சுவிட்ச் ஆன் செய்த போது அணுக்கரு பிளைவு ஏற்பட தொடங்கி 150 மில்லியன் டிகிரிக்கு அதிகமாக வெப்பமானது. எதிர்பார்த்த வெப்பநிலையை எட்டிய சீனா அடுத்ததாக இதை அதிக நேரம் நீட்டித்து வழங்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது. அதன்படி தற்போது 101 வினாடிகளுக்கு 120 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், 160 மில்லியன் செல்சிஸை 20 வினாடிகளுக்கும் நீடித்து சாதனை படைத்துள்ளது.

இரண்டு ஹைட்ரோஜன் அணுக்கள்
இரண்டு ஹைட்ரோஜன் அணுக்களை இணைத்து அதன்மூலம் உற்பத்தியாகும் ஆற்றலை அணுக்கரு இணைவு என கூறுகிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் மூலமாகவே சூரியனில் ஒளி, வெப்பம் ஏற்படுகிறது. உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்குகிறது. இதை செயற்கையாக உருவாக்கி பல்வேறு முயற்சிகள் மூலம் அதை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்கிறது சீனா.


Click it and Unblock the Notifications