Home
News

வார் டாக்ஸ்: குறிவைத்து சுடும் ரோபோ நாய்கள்.. போர் யுக்தியுடன் ரோபோ வேட்டை.. சீனாவின் மாஸ்டர் திட்டம்..

சீனா மறைமுகமாக ஒரு சீக்ரெட் ப்ராஜெக்ட்டில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. சீனா தனது நாட்டின் போர் வீரர்களுடன் இப்போது ஆயுதம் ஏந்திய போர் நாய் ரோபோட்களை தயார் செய்து வருவதாக சீன செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Robot dogs: ரோபோ நாய்களை பல டெக் நிறுவனங்கள் இப்போது உருவாக்கி வருகின்றன. பல காரணங்களுக்காக இந்த ரோபோ நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டை காக்கும் ஒரு நடமாடும் CCTV கேமராவாகவும், பாதுகாப்பு கருவியாகவும், தனியாக வசிக்கும் மனிதர்களுக்கு ஒரு துணையாகவும் இருக்கும் விதத்தில் இந்த ரோபோ நாய்கள் உருவாக்கப்பட்டது.

வார் டாக்ஸ்: குறிவைத்து சுடும் ரோபோ நாய்கள்.. போர் யுக்தியுடன் வேட்டை!

ரோபோ நாய்: ஆனால், சீனா இந்த ரோபோ நாய் தொழில்நுட்பத்தை போர் கருவியாக மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆம், போர்க்களத்தில் வீரர்களுடன் ஆயுதம் ஏந்தி எதிரிகளை விரட்டி-விரட்டி தாக்கவும், மற்றும் போர் களத்தில் தேவைப்படும் மருத்துவ உதவி மற்றும் புல்லட்களை எடுத்துச்செல்லும் டெலிவரி ரோபோட்டாகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

china war robot dogs: இந்த செயல்பாட்டிற்கான சோதனைகளை சீனா மிகவும் சீக்ரெட்டாக சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட ரோபோ நாய் உடம்பில் ஆயுதம் பொருத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் கூட சீன ஊடகங்களில் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆயுதங்களுடன் காணப்பட்ட இந்த போர் நாய்கள் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

வார் டாக்ஸ்ஸா? அப்படினா என்னது? ஆயுதம் ஏந்திய நாய் ரோபோட்களை வைத்து சீனா என்ன செய்ய பார்க்கிறது? இந்த நாய் ரோபோட்கள் போர்க்களத்தில் என்ன செய்யும்? இது ஆபத்தானதா? ரோபோ போர் நாய்கள் பற்றிய விபரங்கள் இதோ. இனி போர்க்களத்தில் பீரங்கி, ஏவுகணை, மெஷின் கன், ஜெட் பிளைன் மட்டும் இடம்பெறப்போவதில்லை.

வார் டாக்ஸ்: இந்த வரிசையில் எதிரிகளை பாய்ந்து குறிவைத்து தாக்கும் வார் டாக்ஸ்களும் (War dogs) இடம்பெறப் போகிறது என்று சமீபத்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன. வார் டாக்ஸ் என்பது போர் நாய்கள் என்று பொருளாகும். சமீபத்தில் நடைபெற்ற MWC 2024 நிகழ்வில் கூட, சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் சொந்த ரோபோ நாய் படைப்புகளை அறிமுகம் செய்தது.

வார் டாக்ஸ்: குறிவைத்து சுடும் ரோபோ நாய்கள்.. போர் யுக்தியுடன் வேட்டை!

குறிவைத்து சுடும் நாய்கள்: இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை எதோ ஒரு காரணத்திற்காக நிறுவனம் அறிமுகம் செய்திருந்தாலும், சீனா இதை போர் ஆயுதமாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இராணுவ வீரர்களுடன் போர் யுக்தியில் கலந்துகொண்டு, பெரிய அளவிலான தாக்குதலை சுடும் திறனுடன் இந்த போர் நாய்கள் நிகழ்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவின் மாஸ்டர் பிளான்: நான்கு இயந்திர கால்களுடன் கரமுரடான தளம், படிக்கட்டு, மேடான இடம், குதிப்பது, நீண்ட தூரம் தாவுவது, வேகமாக ஓடுவது போன்ற செயல்களை இந்த ரோபோ நாய்கள் செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த திறன்களுடன் ரோபோ நாய்களுக்கு சுடும் பயிற்சி, இலக்கை குறிவைத்து தாக்கும் பயிற்சி போன்ற போர் பயிற்சிகளை சீனா அது உருவாக்கும் ரோபோ நாய்களுக்கு கற்றுத்தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

AI உடன் மேம்படுமா போர் நாய்கள்: இது போர் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்று நமக்கு தெரியவில்லை. மிக பெரிய டெக் வல்லுநர்கள், சீனாவின் இந்த முயற்சி முற்றிலுமாக வெற்றி அடைய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளனர், இன்னும் சில வல்லுநர்கள், AI உதவியுடன் சீனா குறுகிய காலத்திற்குள் அதன் ரோபோ நாய்களை மிகச்சிறந்த போர் ஆயுதமாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இப்போதைக்கு சோதனையில் உள்ள இந்த போர் நாய்களை சீனா எப்படி மேம்படுத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
China robot war dog with shooting missile power under developing stage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X