Space டூர் போக ரெடியா.. சீனாவின் அடுத்த பிளான்! டிக்கெட் விலை இதுதான்..

|

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் CNSA, விண்வெளி சுற்றுலாவுக்கான பணியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்வெளி விமானங்கள் ஜெஃப் பெசேஸ் இன் ப்ளூ ஆர்ஜின் விமானங்கள் போன்றே இருக்கும் எனவும் செயல்பாடும் அதற்கு இணையாகவே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விண்வெளி சுற்றுலா சேவை

விண்வெளி சுற்றுலா சேவை

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம், விண்வெளி சுற்றுலா சேவையை 2025 ஆம் ஆண்டில் தொடங்கலாம் என அந்நாட்டின் சிறந்த விண்வெளி நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.

அப்படி இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் டிக்கெட் விலை என்னவாக இருக்கும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஏரோஸ்பேஸ் ஃப்ளைட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மையம்

ஏரோஸ்பேஸ் ஃப்ளைட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மையம்

சீன அறிவியல் அகாடமியின் ஏரோஸ்பேஸ் ஃப்ளைட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மையத்தின் இயக்குனர் யாங் யிகியாங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீனா விண்வெளிப் பயணத்தின் புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டதாகவும், மூன்று விதமான விண்வெளி பயணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் யாங் தெரிவித்துள்ளார்.

பயணத்துக்கான டிக்கெட் விலை

பயணத்துக்கான டிக்கெட் விலை

விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான டிக்கெட் விலை $285,000 முதல் $428,000 ஆக இருக்கலாம் என யாங் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வளர்ச்சி நிலையை சீனா எட்டும்..

அமெரிக்காவின் வளர்ச்சி நிலையை சீனா எட்டும்..

10 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் வளர்ச்சி நிலையை சீனா எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக யாங் கூறினார்.

சீனாவின் விண்வெளி சுற்றுலா விமானங்கள் ப்ளூ ஆர்ஜின் விமானங்கள் போன்றே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த விமானமும் விண்வெளியில் கர்மன் கோட்டை தாண்டி பயணித்து பூமிக்கு திரும்பும் என கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கர்மன் கோட்டை தாண்டி சுற்றுலா அழைத்து சென்ற முதல் நிறுவனம் ப்ளூ ஆர்ஜின் தான்.

ப்ளூ ஆர்ஜினின் விண்வெளி சுற்றுலா

ப்ளூ ஆர்ஜினின் விண்வெளி சுற்றுலா

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளிட்ட மூன்று பேரை ஏற்றிக் கொண்டு ப்ளூ ஆர்ஜினின் முதல் சுற்றுலா விமானமான நியூ ஷெப்பர்ட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு பறந்தது.

விண்கலன் பூமியில் இருந்து சுமார் 62 மைல் (100 கிலோமீட்டர்) உயரத்தில் கர்மன் கோட்டை கடந்து சென்றது. பின் காப்ஸ்யூல் ஆறு பாராசூட்களுடன் பூமிக்கு திரும்பியது.

விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க்

விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க்

இருப்பினும் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து சென்ற முதல் நிறுவனம் ப்ளூ ஆர்ஜின் அல்ல. அது விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க் ஆகும்.

ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தான் முதலில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற நிறுவனம் ஆகும்.

விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக் விமானம் மூலம் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பிரான்சன் மற்றும் மூன்று சக பணியாளர்களை சுமந்து கொண்டு இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் விண்ணுக்கு பறந்தது.

கர்மன் கோட்டை தாண்டி விண்வெளி சுற்றுலா..

கர்மன் கோட்டை தாண்டி விண்வெளி சுற்றுலா..

இந்த இரண்டு சுற்றுலாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரணம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் நிறுவனம் விர்ஜின் கேலடிக் ஆக இருந்தாலும்.

பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் கர்மன் கோட்டை தாண்டி விண்வெளி சுற்றுலா சென்ற முதல் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் இன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தான்.

தற்போது இந்த போட்டியில் சீன அரசு நடத்தும் சீன தேசிய விண்வெளி நிர்வாகம் CNSAவும் இணைய இருக்கிறது.

விண்வெளி சுற்றுலாவில் கடும் போட்டி

விண்வெளி சுற்றுலாவில் கடும் போட்டி

விண்வெளி சுற்றுலாத் திட்டத்தில் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோம் ஆகிய நிறுவனங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை விண்வெளிக்கு அனுப்பும் சாத்தியக் கூறுகள் குறித்து இந்தியாவும் விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன்மூலம் விண்வெளி சுற்றுலாவில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
China Plans to Space Tourism From 2025: Here the Ticket Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X