ஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி

யாமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உலகளாவில் வர்த்தகத்தில் நல்ல லாபம் பெற்று வருகிறது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு இணையாக தற்போது சீனாவின் பிரபல தொழிலதிபர் லீ ஜூன் என்பவர் ஒப்பிடப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி வல்லுனரகளின் கணிப்பின்படி தற்போது ஆப்பிள் நிறுவனத்தைவிட ஸ்மார்ட்போன் உலகில் இரு மடங்காக அவர் கொடி கட்டி பறந்து வருகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி

இந்த வாரம் மோர்கன் ஸ்டான்லே என்பவரின் கருத்துப்படி சியோமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உலகளாவில் வர்த்தகத்தில் நல்ல லாபம் பெற்று வருவதோடு மிக வேகமான வளர்ச்சியையும் பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு $65 பில்லியனில் இருந்து $85 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல் வரும் 2019ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமான மிக அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோர்கன்

மோர்கன்

மோர்கன் அவர்களின் தோராயமான கணக்கின்படி ஆப்பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பை விட 2019ஆம் ஆண்டில் சியோமியின் மதிப்பு இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஹார்ட்வேரில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கும் பிட்பிட் மற்றும் கோபுரோ ஆகைஅய் நிறுவனங்களை சியாமி எளிதில் முந்திவிடும் என்றும், அதேபோல் சீனாவின் மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனமான அலிபாபா குரூப் நிறுவனம் மற்றும் பேய்டு நிறுவனங்களை சியோமி பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

குறைந்த லாபம்

குறைந்த லாபம்

வங்கிகளில் உள்ள வல்லுனர்களின் கணக்கின்படி இந்த நிறுவனத்தின் அபாரமான வளர்ச்சி பெற்ற கதை எப்படி என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது,. மேலும் சியோமி நிறுவனமே இதுகுறித்து சுமார் $10 பில்லியன் செலவு செய்து தங்களுடைய முன்னேற்றம் குறித்து மக்களின் அறிவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது

2020ஆம் ஆண்டில் சியாமி நிறுவனம் $92 பில்லியன் சொத்து மதிப்பு உள்ள ஒரு மிக வலிமையான நிறுவனமாக மாறி விடும் என்று பிரத்யேகமான ஒரு அறிக்கையில் ஜேபி மோர்கன் சேஸ் & கோ தெரிவித்துள்ளார். பல நிறுவனங்கள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற தாரக மந்திரமே சியோமியின் அபரீதமான வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது

ஆப்பிள்

ஆப்பிள்

சியோமி நிறுவனத்தின் வரி மற்றும் வட்டி மட்டும் 2020 ஆம் ஆண்டில் 29 பில்லியன் யான் இருக்கும் என்றும், இந்த மூன்று ஆண்டில் இந்த வளர்ச்சி 58 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சீன நிறுவனம் ஸ்மார்ட்பொன்களை சீனாவின் மொத்த உற்பத்தியில் 42% உற்பத்தி செய்து வருவதாகவும், அதாவது இதன் உற்பத்தி எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாகவும், அந்த வல்லுனர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த வளார்ச்சி வரும் 2019ஆம் ஆண்டில் 179 மில்லியனாக இருக்கும் என்றும், 2020ஆம் ஆன்ஹ்டில் 218.6 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி 216.8 என்பது குறிப்பிடத்தக்கது.

100 மில்லியன்

100 மில்லியன்

கோல்ட்மேன் சாச் குரூப் நிறுவனத்தின் கணக்கின்படி சியாமி நிறுவனத்தின் பொருட்களை சீனாவில் மட்டும் சுமார் 100 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது மேலும் இதுகுறித்து கோல்ட்மேன் நிறுவனம் கூறியபோது இண்டர்நெட் பயன்பாட்டாளர்களை குறிவைத்து இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இருப்பதால் இதன் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் ஹார்ட்வேர் பொருட்கள் மற்றும் சாப்ட்வேர் பொருட்களும் நல்ல லாபத்தையும் வருமானத்தையும் பெற்று தருகிறது.

ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக மார்க்கெட்டில் நுழைந்த இந்த நிறுவனம் அதன் பின்னர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி கொண்டது. பெரிய லாபத்தை எதிர்நோக்காததே இந்த நிறுவனத்தின் வளர்ச்சியாக கருதப்படும் நிலையில் ஒருசில பொருட்களில் நல்ல லாபத்துடன் விற்பனை செய்து வருவதாக மோர்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
China Phone Giant Xiaomi May Be Twice as Expensive as Apple : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X