Home
News

உங்க ஸ்மார்ட்போனில் இருந்து இதை உடனே நீக்கவும்- சியோமிக்கு உத்தரவிட்ட சீன அரசு: அப்படி என்ன அம்சம் தெரியுமா?

சியோமி சமீபத்தில் தனது மிக்ஸ் போனை எம்ஐ மிக்ஸ் 4 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தில் மிகவும் பேசப்பட்ட அம்சம் ஆண்டி-தெஃப்ட் அம்சமாகும். சிம் கார்ட் நீக்கப்பட்டாலும் இந்த அம்சம் சாதனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அனுமதிக்கிறது. South China Morning Post தகவலின்படி சீன அரசாங்கம் இந்த அம்சத்தை நீக்க சியோமிக்கு உத்தரவிட்டுள்ளது.

முறையான ஒப்புதல் பெறவில்லை

முறையான ஒப்புதல் பெறவில்லை

வெளியான அறிக்கையின்படி, இந்த அம்சம் தொடர்புடைய விதிகளுக்கு இணங்கவில்லை மற்றும் சீன கட்டுப்பாட்டாளர்களிடம் இருந்து முறையான ஒப்புதல் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா இ-சிம் மற்றும் மெய்நிகர் சிம் தொழில்நுட்பத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் சியோமி பகிரவில்லை.

ஆண்டி-தெஃப்ட் பாதுகாப்பு அம்சம்

ஆண்டி-தெஃப்ட் பாதுகாப்பு அம்சம்

சியோமியின் ஆண்டி-தெஃப்ட் பாதுகாப்பு அம்சம் குறித்து பார்க்கையில், இது பொதுவாக திருட்டு எதிர்ப்பு செயல்பாடு உடன் வருகிறது. ஸ்மார்ட்போனை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்கிறது. ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் அதன் இருப்பிடத்தை காண்பிக்க உதவுகிறது. சியோமியின் எம்ஐ மிக்ஸ் 4., சாதனத்தில் இருக்கும் திருட்டு எதிர்ப்பு அம்சமானது, ஸ்மார்ட்போனில் இருந்து சிம் கார்ட் நீக்கப்பட்டாலும். இழந்த சாதனத்தை கண்டுபிடிக்க உரிமையாளரை அணுக உதவுகிறது. இ-சிம் சாதனம் இணையத்துடன் இணைந்து சாதனம் இருப்பிடத்தை கண்டறிய உதவுகிறது.

தனியுரிமை பாதுகாப்பில் சிறப்பு கவனம்

தனியுரிமை பாதுகாப்பில் சிறப்பு கவனம்

இந்த வார தொடக்கத்தில் எம்ஐ மிக்ஸ் 4 வெளியீட்டில், சியோமியின் நிறுவனர் லீ ஜுன் தற்போதைய தகவல் குறித்து பேசினார். அதில் சியோமி ஒரு நிறுவனமான எப்போதும் பயனர்களுக்கான தனியுரிமை பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறது என குறிப்பிட்டார்.

அண்டர்-டிஸ்ப்ளே கேமரா

அண்டர்-டிஸ்ப்ளே கேமரா

எம்ஐ மிக்ஸ் 4 சாதனமானது சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மை தொலைபேசி ஆகும். எம்ஐ மிக்ஸ் 4 முக்கிய சிறப்பம்சங்கள் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா ஆகும். இதில் பாயின்ட் டூ கனெக்ட் அல்ட்ரா வைட் பேண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ 5ஜி அம்சத்தோடு வருகிறது. இது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

எம்ஐயுஐ 12.5 அடிப்படையிலான ஆண்டாய்டு இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் 3டி வளைந்த டிஸ்ப்ளே 2400x1080 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தின் மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி இயங்குதளம்

ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி இயங்குதளம்

சியோமி எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வீதம் மூலம் இயக்கப்படுகிறது. சியோமி எம்ஐ மிக்ஸ் 4 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்போடு வருகிறது. இதில் 108 எம்பி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமராவோடு வருகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888+ 5ஜி ப்ராசஸர் வசதியோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயுஐ 12.5 மூலம் இயக்கப்படுகிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் வைஃபை 6இ, ப்ளூடூத் 5.2, 5ஜி மற்றும் டைப்சி போர்ட் இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
China Orders to Xiaomi to Remove this New Feature From Mi Mix 4s: Do you Know the Reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X