5ஜி நெட்வொர்க்கிங் சேவையை அறிமுகம் செய்த சீனா! ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை என்ன தெரியுமா?
உலகின் மிகப்பெரிய 5ஜி மொபைல் நெட்வொர்க்கை சீனா தற்பொழுது அதன் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளைக் காட்டிலும் தற்பொழுது சீனா 5ஜி தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஐந்தாம் தலைமுறை நெட்வொர்க்
ஐந்தாம் தலைமுறை மொபைல் நெட்வொர்க்கான, 5ஜி நெட்வொர்க்கை ஆவலுடன் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் புதிய 5ஜி தொழில்நுட்பம் பழைய 4ஜி நெட்வொர்க்கை விட 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படுவதே முக்கிய காரணம்.

புதிய 5ஜி தொழில்நுட்பம்
இந்த புதிய 5ஜி தொழில்நுட்பம் உலகத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் பல புதிய புரட்சி மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுப்ட சேவை பல்வேறு பயன்பாடுகளுக்கான இணைய வேகத்திற்கான வேகத்தை அதிகரித்து மேம்படுத்த வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 நகரங்களில் 5ஜி சேவை
அமெரிக்கா உடனான வர்த்தகப் போரில் சீனா பூட்டப்பட்டிருக்கும் போது, தனது நாட்டை ஒரு தொழில்நுட்ப சக்தியாக மாற்றுவதற்கான சமீபத்திய மைல்கல்லின் முயற்சியாக, சீனா தற்பொழுது அதன் நாட்டில் சுமார் 50 நகரங்களில் அதன் 5 ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்துள்ளது.

5ஜி நெட்வொர்க் கட்டணம்
சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங், ஷென்ஜென் உள்ளிட்ட நகரங்களில் 5ஜி நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவைக்கு மாதத்திற்கு 128 யுவான் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 1,300 முதல் 5ஜி திட்டம் தொடங்குகின்றது, அதிகபட்சமாக ரூ.6000 வரை வசூலிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 10 மில்லியன் பயனர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

யாயமான விலையில் 5ஜி
5ஜி தொழில்நுட்பம் 2020 இல் தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் மற்ற நாடுகளை விட முன்னதாக சீனா 5ஜி தொழில்நுட்ப நெட்வொர்க்கிங் சேவையைத் தனது நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. போட்டியாளர்களான சீனா யூனிகாம் ஹாங்காங் லிமிடெட் மற்றும் சீனா டெலிகாம் கார்ப்பரேஷன் கூட நியாயமான விலையில் தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications