சீனாவி்ல் சூரிய மின்சக்தியில் இயங்கும் பஸ்கள் அறிமுகம்!

Posted By: Staff
சீனாவி்ல் சூரிய மின்சக்தியில் இயங்கும் பஸ்கள் அறிமுகம்!

சீனாவில் முதன் முதலாக சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது இந்த பேருந்துகள் சோலார் பேட்டரி செல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் இயங்கும்.

கடந்த புதன் கிழமை அன்று இந்த பேருந்துகள் வடகிழக்குச் சீனாவில் உள்ள ஒரு முக்கிய மாநகரத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பேருந்துகள் ஹய்லாங்க்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டதாக எக்ஸின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும்  ஹய்லாங்க்ஜியாங் கிகிஹார் லாங்குவா நியூ எனர்ஜி ஆட்டோமொபைல் கோ லிமிட்டெட் நிறுவனத்தால் இந்த பேருந்துகளுக்கான சோலார் பேனல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்தில்100 பேர் பயணம் செய்யலாம்.

இந்த பேருந்துகளைத் தயாரித்த நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறும் போது சூரிய ஆற்றல் இந்த பேருந்துகளில் உள்ள லித்தியம் பேட்டரிக்கு மின்சாரத்தை வழங்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த பேருந்துகள் இயங்க ஒரு கிலோ மீட்டருக்கு 0.6 முதல் 0.7 கிலோ வாட் மணி மின்சாரம் தேவைப்படுகிறது. டீசலுக்கு மாற்றாக சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முன்வரும் இந்த சீனாவின் முயற்சியைப் பாராட்டலாம். இந்த பேருந்துகள் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot