Home
News

சத்தமில்லாமல் விண்வெளி நிலையத்துக்கு முக்கியமான கருவியை அனுப்பிய சீனா.!

சீனா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன என்று தான் கூறவேண்டும். அதன்படி விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு நிலையத்துக்கு தேவையான பல முக்கியமான கருவிகளை சீனா தற்போது வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

சீனா அமைக்கும் ஆய்வு நிலையம்

சீனா அமைக்கும் ஆய்வு நிலையம்

மேலும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை நிர்ணயித்துள்ளன. இதேபோன்று விண்வெளியில் ஒரு தரமான ஆய்வு நிலையத்தை அமைக்கு முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீனா அமைக்கும் ஆய்வு நிலையம்
'டி" வடிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டியானே கருவி

டியானே கருவி

மேலும் அதற்கு தேவையான முக்கியமான சாதனங்கள், கருவிகளை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்லையில் நேற்று மிகவும் முக்கியமான கருவியை ராக்கெட் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவந்த தகவலின்படி, ஹைனான் தீவில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட் ஆனது திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப் பாதையை அடைந்தது. மேலும் 'டியானே' எனப்படும் கருவி விண்வெளி ஆய்வு நிலையத்தின் நிர்வாக மற்றும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாசா-பெர்சவரன்ஸ் ரோவர்

நாசா-பெர்சவரன்ஸ் ரோவர்

மேலும் நாசா அமைப்பு கடந்த ஆண்டு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள்,குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய ஹெலிகாப்டர்

சிறிய ஹெலிகாப்டர்

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு
பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

 சாதனை படைத்துள்ளது

பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த வாரங்களில் இருமுறை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.

39.1 வினாடிகளுக்கு மேல்

39.1 வினாடிகளுக்கு மேல்

இந்நிலையில் மூன்றாவது முறையாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் சிறிய ஹெலிகாப்டர் 39.1 வினாடிகளுக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பியதாக நாசா அறிவித்துள்ளது. பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு
ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
China launches main part of space station: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X