இனி வரும் முன் கணிப்போம்: சீனா விண்ணுக்கு அனுப்பிய காஃபென்-5 செயற்கைக் கோள்- எதற்கு தெரியுமா?

|

சீனா காஃபென்-5 02 செயற்கைக் கோளை சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செலுத்தியது. இந்த வெளியீடானது சீனாவில் உள்ள தையுவான் செயற்கைக் கோள் வெளியீட்டு மையத்தில் உள்ள வளாகம் 9-ல் நடத்தப்பட்டது. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்

புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த காஃபென்-5 செயற்கைக் கோளானது சுற்றுச் சூழல் பாதிப்புகள், நீரின் தரம் மற்றும் வளிமண்டல மாற்றங்களை கண்காணிக்க உதவும். அதேபோல் காஃபென்-5 ஆனது ஹைப்பர்ஸ் பெக்ட்ரல் வகை செயற்கைக் கோளாகும். இந்த செயற்கைக் கோளானது பஸ் SAST3000 மற்றும் அகச்சிவப்பு முதல் புற ஊதா வரையிலான ஸ்பெக்ட்ரத்தை கண்காணிக்கக்கூடிய ஏழு கருவிகளை கொண்டுள்ளது. அதேபோல் இதில் உள்ள 15 வெவ்வேறு சேனல்களின் வளிமண்டல தரவை அளவிட முடியும் என கூறப்படுகிறது.

காஃபென்-5 செயற்கைக் கோள்

காஃபென்-5 செயற்கைக் கோள்

இது லாங் மார்ச் 4சி விண்கலம் மூலம் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதலத்தில் இருந்து காஃபென்-5 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இது ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோள் ஆகும். இதன்மூலம் முப்பரிமாண முறையை விட அதிநவீன முறையில் படம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி கண்காணிப்பு அமைப்பு

பூமி கண்காணிப்பு அமைப்பு

இந்த திட்டமானது 2006-ல் முன்மொழியப்பட்டு 2010 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. சீனா தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (EOSDC-CNSA) பூமி கண்காணிப்பு அமைப்பு மற்றும் தரவு மையத்தை உருவாக்க வழிவகுக்கிறது. திட்டத்தின் குறிக்கோள் கடல் கண்காணிப்பு, பேரழிவு ஆய்வுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் முன்கணிப்பு போன்ற அமைப்புகளை கண்காணிக்க உதவுகிறது.

3.8 மீட்டர் விட்டம் 45.8 மீட்டர் உயரம்

முதல் காஃபென் ஏவுதல் ஆனது ஏப்ரல் 2013-ல் சாங் ஜெங் 2டி-ல் இருந்து ஏவப்பட்டது. கடைசியாக மார்ச் 2021-ல் காஃபென் 12 ஏவப்பட்டது. அதேபோல் நேற்று ஏவப்பட்ட சாங் ஜெங் 4சி ராக்கெட் ஆனது 3.8 மீட்டர் விட்டமும் 45.8 மீட்டர் உயரமும் கொண்டது. இது மூன்று நிலைகளில் சுமார் 250000 கிலோ தூக்கும் தன்மையை கொண்டது.

நீண்ட கால திட்ட செயல்பாடு

நீண்ட கால திட்ட செயல்பாடு

அதேபோல் சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விண்கலத்தை சுற்றுப்பாதையில் இணைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர். இந்த திட்டமானது விண்வெளி ஆய்வை விரிவுப்படுத்துவதற்கான தேசத்தின் லட்சியங்களில் ஒரு பகுதியாகும். இது நீண்ட கால திட்ட செயல்பாடு குழு பயணங்களை உள்ளடக்கியது. மைல் அளவு நீளமுள்ள ஒரு விண்கலத்தில் உருவாக்க ஆர்வமாக இருப்பதாக சீனா தரப்பில் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக சீனா நீண்ட தூர பயணங்களுக்காக ஒரு மைல் நீளமுள்ள விண்கலத்தை ஆராய்ச்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்கால விண்வெளி வளம்

எதிர்கால விண்வெளி வளம்

இந்த குறிப்பிட்ட முயற்சியானது ஒரு பெரிய மூலோபாய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்கால விண்வெளி வளங்களின் பயன்பாடு, பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நீண்டகால சுற்றுப்பாதையில் இருப்பதை நிறுவனம் உறுதி செய்கிறது.

கணித மற்றும் இயற்பியல் துறை

கணித மற்றும் இயற்பியல் துறை

கணித மற்றும் இயற்பியல் துறையில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 10 முன்மொழிந்த ஆராய்ச்சி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2.3 மில்லியன் டாலர் அளவில் திட்டத்துக்கு செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விண்வெளி அடிப்படையிலான அசிம்பிளி பாகங்கள் தேவைப்படும் எனவும் இது அதிக எடை இருக்கும் எனவும்

கடுமையான சவால்

கடுமையான சவால்

இதனால் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கடுமையான சவாலை எதிர்கொள்கின்றனர் என கூறப்படுகிறது. விண்வெளியில் ஏவுவதற்கு ஏதுவாக எடைகளை குறிக்க வேண்டும் மேலும் நாட்டின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
China Launched its Second Gaofen-5 Satellite to Track Environmental Impacts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X